நியூயார்க்: ஒரு சிறுமி பெற்றோரை தொலைத்துவிட்டதாக கூறி மற்றவர்களிடம் உதவி கேட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி உருவாக்கப்பட்டுள்ள வீடியோ யாரும் எதிர்பாராத அதிர்ச்சியான முடிவை அளித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த யூ டியூப் சேனல் ஒன்று ஒரு சிறுமி பெற்றோரை தொலைத்துவிட்டு மற்றவர்களிடம் உதவி கேட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளும் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளது.

அந்த வீடியோவில் 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் செல்பவர்களிடம் நான் அம்மாவை தொலைத்துவிட்டேன் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்.

சிலர் அக்கறையாக விசாரித்து சிறுமியின் வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை கேட்டு அவருக்கு உதவ முன்வருகிறார்கள்.

அதில் ஒருவர் தன்னுடைய ரயில் பாஸை கொடுத்து பயன்படுத்திக்கொள்ளும் படி சொல்கிறார். சிலர் என்ன ஏது என்று கூட விரும்பவில்லை.

ஆனால் இதையெல்லாம் கவனித்தப்படி இருக்கும் ஒருவன் அந்த சிறுமியை வலுகட்டாயமாக தன்னுடன் இழுத்துச்செல்ல முயல்கிறான்.

இதற்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து போலீசிற்கு தகவல் கொடுத்துவிடுகிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அவனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தது.

அதில் அந்த நபர் தேடப்படும் குற்றவாளி என்பதுடன் குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொண்டவன் என்பதும் தெரியவந்தது.

Share.
Leave A Reply