மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தில் தனியாக இருந்த காதல் ஜோடியை 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்டட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனியாக இருந்த காதல் ஜோடியை சுற்றிவளைத்த 12 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது.

காதலருடன் இருந்த இளம்பெண் தங்களை விட்டு விடும்படி கெஞ்சிய போதும் இருவரையும் அடித்து உதைத்துடன் அந்த கும்பல் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நான்ட்ட மாவட்ட காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply