படைக்­கு­றைப்பு அல்­லது படை­வி­லக் கம் குறித்த விவ­காரம் இப்­போது மீண்டும் சூடு­பி­டித்­தி­ருக்­கி­றது.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம், ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்த பின்னர், இந்த விவ­காரம், அவ்­வப்­போது சூடு­பி­டிப்­பதும், பின்னர் தணித்து போவ­து­மா­கவே இருந்து வந்­துள்­ளது.

வடக்கில் செறி­வாக நிறுத்­தப்­பட்­டுள்ள படை­யி­னரை அங்­கி­ருந்து விலக்க வேண்டும் என்று கடந்த வாரம் கொழும்பில் நடந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கேட்டுக் கொண்­டி­ருந்தார்.

அதற்கு முன்­ன­தாக, அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவைத் தள­மாக கொண்ட ஒக்லன்ட் நிறு­வகம் என்ற ஆய்வு அமைப்பு வெளி­யிட்ட அறிக்­கை­யிலும், ஆயுத மோதல் முடி­வுக்கு வந்த பின்­னரும், வடக்கில் இரா­ணு­வ­ம­ய­மாக்கல் சூழல் முடி­வுக்கு வர­வில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

கடந்த மே மாத துவக்­கத்தில் கொழும்பு வந்­தி­ருந்த அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் கூட, வடக்கிலிருந்து படை­யி­னரைக் குறைக்க வேண்டும், என்­பதைத் தெரி­வித்­தி­ருந்தார்.

அது­மட்­டு­மன்றி, இந்­தி­யாவில் பிர­ப­ல­மான ஊட­கங்கள் அண்­மையில் எழு­திய ஆசி­ரியர் தலை­யங்­கங்­க­ளிலும் இதனை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன.

இந்தப் பின்­ன­ணியில் தான், கடந்த வாரம் பலாலிப் படைத்­த­ளத்­துக்கு கொழும்பு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் குழுவொன்று அழைத்துச் செல்­லப்­பட்­டது.

அங்கு யாழ். பாது­காப்புத் தலை­மை­ய­கத்தின் தள­பதி மேஜர் ஜெனரல் நந்­தன உட­வத்த மற்றும் யாழ்ப்­பா­ணத்தில் நிலை­கொண்­டுள்ள படைப்­பி­ரி­வு­களின் தள­ப­திகள் ஆகியோர் ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்­தனர்.Jaffna-468x250வடக்கில் அதி­க­மாக குவிக்­கப்­பட்­டுள்ள படை­யி­னரை விலக்க வேண்டும் என்ற கருத்து வெளி­யு­ல­கி­னாலும், தமிழர் தரப்­பி­னாலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த சூழ­லிலும்- உயர் பாது­காப்பு வலய நிலங்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்டு, தீவி­ர­வாதம் மீண்டும் தலை­யெ­டுக்கும் அச்சம் எழுந்­துள்­ள­தா­கவும், வடக்கில் பாது­காப்பு நிலை­மைகள் மோசமடைந்­துள்­ள­தா­கவும்  மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தென்­னி­லங்­கையில்   போலிப் பிர­சா­ரங்­களை முன்னெடுத்து வந்த நிலை­யிலும் தான் இந்தச் செய்­தி­யாளர் சந்­திப்பு ஒழுங்கு செய்­யப்­பட்­டது.ஒரே நேரத்தில் வடக்­கிற்கும் தெற்­கிற்கும் பதி­லடி கொடுக்க வேண்­டிய நிலை இரா­ணுவத் தரப்­புக்கு ஏற்பட்டிருந்­தது.

இந்தச் செய்­தி­யாளர் சந்­திப்பில், இரா­ணுவம் ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்த பின்னர், படிப்­ப­டி­யாக பொதுமக்­களின் நிலங்­களைக் கைய­ளித்து வந்­துள்­ளதைச் சுட்­டிக்­காட்டி, இது முன்­னைய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கையின் தொடர்ச்சிதான் என்­பதை மேஜர் ஜெனரல் நந்­தன உட­வத்த விப­ரித்­தி­ருந்தார்.

அதே­வேளை, பொது­மக்­க­ளிடம் கையளிக் ­கப்­பட்ட நிலங்­களின் பரப்­ப­ளவைச் சுட்­டிக் ­காட்­டியும், பலாலிப் படைத்­த­ளத்தின் முன்­னைய, தற்­போ­தைய பரப்­ப­ளவைச் சுட்­டிக்­காட்­டியும், தமிழர் தரப்­பையும் அவர் திருப்திப்ப­டுத்த எத்­த­னித்­தி­ருந்தார்.

அடுத்து, அள­வுக்­க­தி­க­மாகப் படை­யினர். குவிக்­கப்­பட்­டுள்­ளனர் என்ற குற்­றச்­சாட்டை நிரா­க­ரிக்க முனைந்த அவர், அதற்கு ஆதா­ர­மான தக­வல்கள் – புள்­ளி­வி­ப­ரங்கள் எதையும் வெளி­யிடத் தயா­ராக இருக்­க­வில்லை.

NYT2008112110222443C2009ஆம் ஆண்டில் 152 இரா­ணுவ முகாம்கள் யாழ்ப்­பாணக் குடா­நாட்டில் இருந்­த­தா­கவும், அவற்றில் 59 முகாம்கள் அகற்­றப்­பட்டு, தற்­போது 93 படை­மு­காம்கள் மட்­டுமே பேணப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டிருந்தார். படை­வி­லக்­கத்தை அல்­லது படைக்­கு­றைப்பை வெளிப்­ப­டுத்த அவர் கூறிய ஒரே புள்ளி விபரம் இது தான்.

ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்த பின்னர், 2010 ஜன­வரி தொடக்கம், 2014 ஜன­வரி வரை, யாழ். படை­களின் தள­ப­தி­யாக இருந்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்­து­ரு­சிங்க அடிக்­கடி ஒரு புள்­ளி­வி­ப­ரத்தைக் கூறுவார்.

தான் யாழ். படை­களின் தள­ப­தி­யாகப் பொறுப்­பேற்றபோது, 27 ஆயி­ர­மாக இருந்த படை­யி­னரின் எண்­ணிக்கை, 13,200 ஆக குறைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறி வந்தார்.

கடந்த ஆண்டில் அவர், யாழ்ப்­பா­ணத்தில் இருந்து விலகிச் செல்ல முன்னர், தற்­போது படை­யி­னரின் எண்ணிக்கை 12,000 ஆகக் குறைக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது­போல இப்­போ­தைய யாழ்ப்­பாண கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் நந்­தன உட­வத்த எந்த புள்ளி விபரங்களையும் ­ெவளியி­ட்­டி­ருக்­க­வில்­லை.

ஆனால், யாழ்ப்­பா­ணத்தில் இருந்த 152 இரா­ணுவ முகாம்­களில், 59 முகாம்­களை மூடி­யி­ருக்­கிறோம் என்று மட்டும் கூறி­யி­ருக்­கிறார். இதன்­படி, யாழ்ப்­பாணக் குடா­நாட்டில் இருந்து 39 சத வீத­மான இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன.

ஆனாலும், 93 இரா­ணுவ முகாம்கள் யாழ்ப்­பாணக் குடா­நாட்டில் இன்­னமும் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன.

eps_map-copie
யாழ்ப்­பாணக் குடா­நாட்டின் மொத்த தரைப் பரப்­ப­ளவு – கட­லே­ரி­களின் பரப்பு போக, 930 சதுர கி.மீ மட்டும் தான்.

இதன்­படி பார்த்தால், யாழ்ப்­பா­ணத்தில் இப்­போது 10 சதுர கி.மீற்­ற­ருக்கு ஒன்று என்ற அடிப்­ப­டையில் இரா­ணுவ முகாம்கள் இருக்­கின்­றன.

இது படைச்­செ­றிவின் தீவி­ரத்தை தெளி­வாக எடுத்துக் காட்­டக்­கூ­டிய ஒரு தர­வாகும்.

இதனை யாழ்ப்­பா­ணத்தில் உள்ள இரா­ணுவத் தள­பதி தான் கூறி­யி­ருக்­கி­றாரே தவிர, இது ஒன்றும் குத்து மதிப்போ, மிகைப்­ப­டுத்­தலோ அல்ல.

நாட்டின் ஏனைய பகு­தி­களைப் போலவே, வடக்­கிலும் இரா­ணுவம் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அடிக்­கடி கூறி­வ­ரு­கி­றது.

அந்­த­வ­கையில் பார்த்தால், இலங்­கையின் மொத்த தரை நிலப்­ப­ரப்­பான 64,740 சதுர கி.மீற்­றரில், மொத்­த­மாக 6,474 இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

அந்­த­ள­வுக்கு இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெளிவு.

haththuru

ஹத்­து­ரு­சிங்க
அடுத்து, 2010ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் யாழ். படை­களின் தள­ப­தி­யாக பொறுப்­பேற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்­து­ரு­சிங்க, தான் பத­வி­யேற்ற போது, 27,150 படை­யினர் யாழ்ப்­பா­ணத்தில் நிலை கொண்­டி­ருந்­த­தாகக் கூறியி­ருந்தார்.அந்தக் கால­கட்­டத்தில், மேஜர் ஜெனரல் நந்­தன உட­வத்த கூறிய போல 152 இரா­ணுவ முகாம்கள் இருந்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.அவ்­வா­றாயின், ஒரு இரா­ணுவ முகாமில் சரா­ச­ரி­யாக 178 படை­யினர் இருந்­தி­ருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்­து­ரு­சிங்க கூறி­யது போல, 12,000 படை­யி­னரும், 93 இரா­ணுவ முகாம்­க­ளுமே இருப்­போது இருப்­ப­தாக வைத்துக் கொண்டால், ஒரு இரா­ணுவ முகாமின் ஆள­ணிப்­பலம், 129 ஆக குறைந்­தி­ருக்க இருக்க வேண்டும்.

இதன்­படி, தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் சதுர கி.மீ ஒன்­றுக்கு 13 படை­யினர் இருக்­கின்­றனர் என்று கருத வேண்டும்.

இதே­போன்று நாடெங்கும், சதுர கி.மீ ஒன்­றுக்கு 13 படை­யி­னரை நிறுத்­து­வ­தானால், இலங்கை இராணுவத்­துக்கு 841,620 படை­யினர் தேவைப்­ப­டுவர்.

ஆனால் இலங்கை இரா­ணு­வத்தின் ஆள­ணிப்­பலம் இரண்டு இலட்­சத்­துக்கும் குறை­வா­னது. கடற்­படை விமானப்­ப­டை­யையும் சேர்த்தால் கூட 3 இலட்சம் பேர் வரை தான் வரும்.

எனவே நாட்டின் பிற­ப­கு­தி­களைப் போலவே, யாழ்ப்­பா­ணத்தில் படை­யினர் நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என்­பது அப்­பட்­ட­மான பொய்.

யாழ்ப்­பா­ணத்தில் மட்­டு­மன்றி, வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் செறிவைக் குறைத்துக் காட்­டு­வ­தி­லேயே அர­சாங்­கமும் படை­யி­னரும் குறி­யாக இருக்­கின்­றனர்.

இதில் முன்­னைய அர­சாங்கம், இப்­போ­தைய அர­சாங்கம் என்ற வேறு­பா­டுகள் இல்லை.

வடக்கில் இருந்து படை­யி­னரை வெளி­யேற்றும் பேச்­சுக்கே இட­மில்லை என்­பது தான், இரண்டு அரசாங்கங்களினதும் ஒரே நிலைப்­பாடு.

அது­போ­லவே, வடக்கில் நிறுத்­தப்­பட்­டுள்ள படை­யினர் பற்­றிய சரி­யான தர­வு­களை வெளி­யி­டு­வதில் முன்னைய அர­சாங்­கத்தைப் போலவே இப்­போ­தைய அர­சாங்­கமும், ஏமாற்­றியே வரு­கி­றது.

Brigadier-Jayanath-jayaweera-300x200பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர

வடக்கில் நிலை­கொண்­டுள்ள படை­யி­னரின் எண்­ணிக்கை பற்­றிய விப­ரங்­களை வெளி­யிட முடி­யாது என்று திட்­ட­வட்­ட­மாக நிரா­க­ரித்­தி­ருக்­கிறார் இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர.

இப்­போது, ஆயுத மோதல்கள் இல்லை. வடக்கில் பாது­காப்பு அச்­சு­றுத்­தலும் இல்லை.

இதைக் கூறும் அர­சாங்கம் தான், வடக்கில் நிறுத்­தப்­பட்­டுள்ள படை­யி­னரின் சரி­யான எண்­ணிக்­கையை வெளி­யி­டவும் மறுக்­கி­றது.

பாது­காப்புக் கார­ணங்­களைக் காட்டி, படை­யி­னரின் எண்­ணிக்­கையை வெளி­யிட மறுப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாது­காப்பு அச்­சு­றுத்தல் இல்லை என்றால், எதற்­காக இரா­ணு­வத்­தி­னரின் தொகையை அர­சாங்கம் மறைக்க வேண்டும்?

அர­சாங்­கமும், படைத்­த­ரப்பும் வடக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கையை வெளியிட மறுப்பதில் இருந்தே, இந்த விவகாரத்தில் அவர்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அனைத்துலக மட்டத்திலும் தமிழ் மக்கள் தரப்பிலும், படைக்குறைப்பு குறித்து வலியுறுத்தப்பட்டாலும், அதனை நிராகரிக்கும் அரசாங்கம் எதற்காக இந்த தரவுகளை மட்டும் மறைக்க வேண்டும்.

அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன், இந்த விவகாரத்தை கையாளும் ஒன்றாக இருந்தால், துணிச்சலுடன் தமது படைவலிமை மற்றும் படைத்தளங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடலாம்.

இல்லாவிட்டால், தமிழ் மக்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் கூட அரசாங்கத்தின் நேர்மையின் மீதும் வாக்குறுதிகள் மீதும் சந்தேகம் கொள்வதைத் தவிர்க்க முடியாது.

அந்த சந்தேகம் உள்ளவரை இலங்கையில் முழுமையான நல்லிணக்கமும் சாத்தியப்படாது.

-சுபத்திரா-

Share.
Leave A Reply