உடவலவ பகுதி பாடசாலை மாணவன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல் விவகாரம் தொடர்பிலே இந்த கொலை சம்பவம் இடம் பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
மேலதிக நேர வகுப்பிற்குச் சென்ற 16 வயதான ஹசித எனும் மாணவன் காணாமல் போயிருப்பதாக உடவலவ பொலிஸில் 14ஆம் திகதி முறையிடப்பட்டது.
இது குறித்து தேடுதல் நடத்திய பொலிஸார் உடவளவ மிரிஸ்வத்த பாலத்திற்கு அருகில் வைத்து வெட்டுக்காயங்களுடன் சிறுவனின் சடலத்தை நேற்று முன்தினம் கண்டுபிடித்தனர்.
சம்பவம் தொடர்பில் இருவர் கைதானதோடு அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி மேலும் இருவர் நேற்று முன்தினம் இரவு கைதாகினர். இவர்கள் 21 மற்றும் 17 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருந்த இந்த மாணவரின் சடலம் பாடசாலைக்கு 500 மீட்டர் துரத்தில் இருக்கும் தேக்குமர காட்டில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.
வேறு இடத்தில் கொலை செய்து காட்டில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.