தொழினுட்ப உலகில் கண் இமைக்கும் நேரத்தில் உலகத்தின் எங்கோர் மூலையில் ஒவ்வொரு கண்டுப் பிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை தினமும் காதை எட்டிய வண்ணமும் உள்ளன.
இவ்வாறான தொழினுட்ப உலகில் போக்குவரத்து துறை என்பது முக்கிய ஒன்றாக காணப்படுகின்ற போதும் இதில் பாரிய பிரச்சினையாக வீதி விபத்துக்கள் பரிணமித்துள்ளன.
அண்மைகாலமாக இலங்கையிலேயே வீதி விபத்துக்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதே போன்றே உலகத்திலும் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வாகவும் ஏனைய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலும் கொரியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங் புதிய படைப்பொன்றை உருவாக்கியுள்ளது.
அதாவது ‘பாதுகாப்பு டிரக்” என்ற பெயரில் வாகனமொன்றை உருவாக்கியுள்ளது சம்சுங் நிறுவனம்.
அதாவது குறித்த டிரக் வாகனத்தில் பின்புறத்தில் பாரியதொரு வண்ணமயமான திரை காணப்படுகின்றது. அந்த திரையில் குறித்த டிரக் வாகனத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியும்.
இதனால் டிரக் வண்டிக்கு பின்னால் வருகின்ற வாகனங்கள் இலகுவாக குறித்த வாகனத்தை கடந்த செல்ல கூடியதாக உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய முயற்சியானது உலக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
காரணம் வீதியில் செல்லும் பாரிய டிரக் வண்டிகளை சிரிய ரக வாகனங்களை கடந்த செல்ல முற்படும் போதும் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாமல் இருப்பதனால் விபத்துக்களை சந்திக்கின்றன.
மேலும் சம்சுங் நிறுவனம் அண்மையில் ஆர்ஜன்டீனாவில் மேற்கொண்ட ஆய்வில் ஒரு மணித் தியாலத்துக்கு ஒருவர் வீதி விபத்தினால் உயிரிழக்கின்றனர்.
இதில் 80 வீதமான விபத்துக்கள் வாகனத்தை முந்திச் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த தொழிட்னுட்ப வண்டியானது மிகப்பெரிய விளம்பர நிறுவனமான லியோ பேர்னட் மற்றும் இன்ஜ்மெடிகா தொழினுட்ப குழுவுடன் இணைந்து சம்சுங் நிறுவனம் தயாரிக்கப்பட்டுள்ளது.