சுன்னாகம் அந்தோனியார் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் புதன்கிழமை (17) இரவு நுழைந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை கத்தி முனையில் வெருட்டி சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்நுழைந்து இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
பெண்களை சில்மிசம் செய்யும் கிழடுகள்
யாழ் நகரப்பகுதிகளில் குறிப்பாக யாழ் கஸ்தூரியார் வீதி, பெருமாள் கோவில் வீதி கன்னாதிட்டி வீதி ஆகிய வீதிகளில் பயணிக்கும் பெண்களுடன் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி சேட்டை செய்வதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதிகளால் பயணிக்கும் தனியார் கல்வி நிலைய மணவிகள், மற்றும் தொழில் புரியும் யுவதிகளளாகியோரிடம் சிலர் தகாத வார்த்தைகளால் சேட்டை செய்வதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுடன் சேட்டை செய்வது வாலிபர்களை விட ஒரளவு வயதானவர்களே எனவும் இது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் சமுக ஆர்வலர்களும் பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு சேட்டை செய்வர்களது புகைப்படங்களும் அடையாளங்களும் தம்மிடம் இருப்பதாகவும் தொடர்ந்து இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டால் புகைப்படங்களை பத்திரிகைகளிற்கும் பொலிஸாரிற்கும் கொடுப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
18-06-2015

பெண்களுடன் சேட்டை புரிந்தது, பொது இடங்களில் கூடி இடையூறு ஏற்படுத்தியது, நெல்லியடி பஸ்தரிப்பிடத்தில் கூடி நின்று பாடசாலை மாணவிகளுடன் சில்மிசம் புரிய முயன்றது போன்ற குற்றச்சாட்டுக்களில் இந்த வாலிபர்கள் கைதாகியுள்ளனர்.
வதிரி சந்தியை மையமாக கொண்ட மின்னல் குறூப், மகாத்மா தியேட்டரின் முன்னால் கூடும் சுல்தான் குறூப் போன்ற சமூகவிரோத கும்பலை சேர்ந்தவர்களே பெருமளவில் கைதாகியுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்த ரௌடிக்கும்பல்கள் தொடர்ச்சியாக பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில், ரௌடிகள் மீது பொலிசார் பாய்ந்துள்ளனர்.
கைதான ரௌடிகளின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு, அவர்களின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்கவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். அத்துடன் இன்று அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.
வீதியோர ரௌடிகளை கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.