சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவரை வகுப்பிற்குள் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி பாலியல் சித்ரவதை செய்த மாணவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Solothurn மண்டலத்தில் உள்ள Schönenwerd நகரில் Swiss International School (SIS) என்ற பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் உள்ள உணவு உண்ணும் அறையில், மாணவர்கள் இரு பிரிவினருக்கிடையே அண்மையில் தகராறு ஏற்பட்டதில் 9 வயதான மாணவி ஒருவர் மாணர்கள் சிலரை மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நிகழ்ந்த மறு நாளில், வகுப்பு இடைவெளி நேரத்தில் அந்த மாணவியின் வகுப்பு அறைக்குள் 4 மாணவர்கள்(10 வயதுக்கும் அதிகமானோர்), 3 சிறுவர்கள்(9 வயதுடையவர்கள்) மற்றும் 10 வயதுடைய ஒரு மாணவி என 8 பேர் நுழைந்துள்ளனர்.

வகுப்பறைக்குள் நுழைந்ததும் 10 வயதான மாணவி கதவை உள்பக்கமாக தாழிட்டு சக மாணவர்களிடம் ஏதோ கூறுகிறாள்.

இதனை தொடர்ந்து, அந்த 9 வயது மாணவி மீது பாய்ந்த அந்த மாணவர்கள், அவருடைய கை, கால்களை கட்டி சத்தம் எழுப்பாதவாறு வாயை மூடுகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களில் ஒருவன் அந்த 9 வயது மாணவி அணிந்திருந்த ஜீன்ஸ் மற்றும் உள்ளாடையை உருவி அவரை நிர்வாணப்படுத்துகிறான்.

இந்த சம்பவத்தால் நிலைகுலைந்தப்போய் நிர்வாணமாக இருந்த அந்த மாணவியிடம் சிலர் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த கொடூரமான சம்பவத்தை தனது பெற்றோரிடம் அந்த மாணவி விளக்கியதும், அவர்கள் சம்பந்தப்பட்டு பள்ளி மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் புகார் அளித்தனர்.

தனது மகன்களின் செயல்களுக்காக சில பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டனர்.

சில பெற்றோர்கள் தங்களுடைய மகன்கள் இதுபோன்ற செயலில் ஈடுப்பட மாட்டார்கள் என மறுத்து வருகின்றனர்.

தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடூரம் போல் வேறு எந்த மாணவிக்கும் நடைபெறக்கூடாது என எண்ணிய மாணவியின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள அதிகாரியான Thomas Kummer கூறுகையில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 வயது அல்லது அந்த வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தண்டிக்க முடியும் என்பதால், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 9 வயதான 3 சிறுவர்களுக்கு எந்தவித தண்டனையும் கிடைக்காது என கூறியுள்ளனர்.

பள்ளி ஒன்றில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிசார் தொடர்த்து மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply