கணவர் இறந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குழந்தையை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட ஒரு தமிழ்ப்பெண், மீண்டும் வந்து கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன் என கூறியுள்ள வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மலேசியாவில் வசித்து வந்தவர், அந்த தமிழ்ப்பெண். அவர் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமான ஒரு மாதத்தில் அந்தப் பெண்ணின் கணவர் மர்மமான முறையில் இறந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர் தனது ஒரு வயது மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக அவர் தமிழில் ஒரு வாக்குமூலம் அளித்து, அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, ஆன்லைனில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

நானும், எனது குழந்தையும் சாகப்போகிறோம். நான் என் கணவர் இன்றி வாழ முடியாது. குழந்தை இல்லாமலும் என்னால் வாழ முடியாது.

நான் என் கணவரை காண்பதற்காக போகிறேன்.

என் கணவர் இயற்கையாக இறந்திருந்தால், நான் பழி வாங்க மாட்டேன். அப்படி இல்லாதிருந்தால், நான் மீண்டும் வந்து பழி வாங்குவேன்.

ஆனால் இப்போது என் குழந்தையை கொன்று பழி வாங்குகிறேன்.

ஒரு குழந்தையை கொல்லும் வலி, பெற்றோருக்குத்தான் தெரியும்.

இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறி உள்ளார்.

Share.
Leave A Reply