அத்தாக்குதலின் பின்னர் சாவச்சேரி பொலிஸ் நிலைய பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை மீண்டும் தாக்கும் திட்டத்தோடு ரெலோ அமைப்பினர் தகவல் திரட்டிக்கொண்டிருந்தனர்.
அதேநேரம் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் மக்கள் விடுதலைப் படையும் தகவல் திரட்டிக்கொண்டிருந்தன.
ஏனைய அமைப்புகளைவிட சாவகச்சேரியில் ஈ.பி.ஆர்.எல.எப் வேரூன்றியிருந்தது. அங்கிருந்து தனது முக்கிய உறுப்பினர்களை பெற்றிருந்தது.
ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பினால் ஈழ முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் வேலைகள் சாவகச்சேரியில் கூடுதலாக நடைபெற்று வந்தன.
ஈழவாலிப முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன்வேலைகள் சாவகச்சேரியில் கூடுதலாக நடைபெற்று வந்தன.
ஈழவாலிப முன்னணிக்கு ரமேஷ் பொறுப்பாக இருந்தார். கிராமங்கள் தோறும் மக்கள் தொண்டர் படை உருவாக்கப்படும் வேலைகள் நடந்து வந்தன.
தமிழரசுக் கட்சி காலத்திலிருந்தே அக்கட்சியின் கோட்டையாக விளங்கியது சாவகச்சேரி.
பின்னர் கூட்டணியின் கோட்டையாக மாறியது. சாவகச்சேரியில் கூட்டணியன் செல்வாக்கை உடைப்பதில் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் அரசியல் கருத்தரங்குகள் முக்கிய பாத்திரம் வகித்தமை மறுக்க இயலாது.
ரமேஷ், சிறிதரன், செழியன், டேவிட்சன் ஆகியோர் அரசியல் கருத்தரங்குகளில் கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
எனவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கான அதிக சாதகம் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்புக்கே இருந்தது.
பொலிஸ் நிலையத்துக்குள் இருந்து அதிக தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கவும் செய்தன.
ஆயினும் “மாபெரும் தாக்குதல்” என்னும் கனவு காரணமாக காரைநகர் கடற்படைமுகாமில் ஈ.பி.ஆர்.எல.எப் குறிவைத்துக்கொண்டிருந்தது.
தாக்குதல்கள் எதிரிக்கெதிராகவே என்றாலும் கூட, தாக்குதல் நடவடிக்கைகளை வைத்து அந்த விளம்பரத்தால் முன்வரிசையில் வந்துவிடுவதற்கான போட்டியும் இயக்கங்கள் மத்தியில் நிலவியது.
புலிகள் சிறுசிறு தாக்குதல்களை நடத்துவதால் நாம் ஒரேயடியாக பெரிய தாக்குதலை நடத்தி முடித்துவிடலாம்.
அதன் விளைவாக தாம் முதலிடத்தில் வந்து புலிகள் உட்பட ஏனைய இயக்கங்களை பின்னால் தள்ளிவிடலாம் என்று ஈ.பி.ஆர்.எல.எப் கணக்குபோட்டது.
அந்தக் கணக்கு தப்புக் கணக்கானதை சென்றவாரம் விபரித்திருந்தேன்.
ரெலேவை பொறுத்தவரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கும் திட்டத்தோடு ஒரு கௌரவ பிரச்சனையும் இருந்தது.
ஏற்கனவே பொலிஸ் நிலையத்தை தாக்கியிருந்தார்கள் அல்லவா எனவே தமது தாக்குதல் புலிகள் நடத்திய தாக்குதலைவிட சிறப்பாக அமையவேண்டும் என்று ரெலோ திட்டமிட்டது.
ரெலோ தலைவராக இருந்த சிறீசாபாரத்னம் நேரடியாகவே தாக்குதலுக்கான தயாரிப்புகளை கவனிக்க தமிழகத்திலிருந்து யாழ்பாணத்துக்கு வந்திருந்தார்.
தாக்குதலை படம்பிடிக்க வீடியோ கமராவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தால் அதனைவைத்து வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் பெரியளவில் பிரச்சாரம் நடத்தலாம். நிதி திரட்டவும், நம்பிக்கையூட்டவும் வீடியோ ஆதாரம் உதவியாக இருக்குமல்லவா?
இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை சொல்லவேண்டும்.
1980களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலானோர் தமிழ் இயக்கங்களில் இரண்டையே கூடுதலாக நம்பினார்கள்.
ரெலோவும், புலிகள் அமைப்புமே அந்த இரண்டு அமைப்புகள். ஈ.பி.ஆர்.எல.எப், புளொட், ஈரோஸ் போன்ற அமைப்புகள் கம்யூனிச சித்தாந்தம் கொண்டவை என்று ஒரு சாரார் முகம் சுளித்தார்கள்.
தாக்குதல் நடத்தாமல் தத்துவம் பேசுவதாக கூறி மற்றொரு சரார் அந்த அமைப்புகளை சுவாரசியமில்லாமல் நோக்கினார்கள். .
அமெரிக்காவில் இருந்து வந்த குழு.
மற்றொரு இரகசியம் ஒன்று சொல்கிறேன்.
1984 இல் அமெரிக்காவில் உள்ள இலங்கை தமிழர்களான வசதி படைத்த புத்திஜீவிகள் குழு ஒன்று சென்னைக்கு வந்தது.
தமிழ் இயக்கங்களின் தலைவர்களை அக்குழு சந்தித்தது. அக்குழுவினரிடம் ஒரு பயங்கரமான திட்டம் இருந்தது.
அக்குழுவுக்கு தலமைதாங்கி வந்தவர் ஒரு பிரபல தமிழ் டாக்டர். இப்பாதும் அமெரிக்காவில் இருக்கிறார்.
இயக்கங்களின் தலைவர்களை தனித்தனியே அக்குழுவினர் சந்தித்திருந்தனர்.
“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், ஆனால் ஒரு நிபந்தனையோடு”
“என்ன நிபந்தனை?”
பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியை தீர்த்துக்கட்டவேண்டும்.
முடியுமா??
அப்பொழுதெல்லாம் கொழும்பில் நடவடிக்கைகளில் இறங்குவது பற்றி இயக்கங்கள் அதிகம் யோசிக்காத காலகட்டம்.
வேறு சூழல், வேறு மொழி பேசும் மக்கள், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்.
எனவே நடவடிக்கைகள் வெற்றியளிப்பது கஷ்டம் என்றே கருதப்பட்டது..
எனவே இயக்கங்களின் தலைவர்கள் திட்டவட்டமாக “ஆம்” சொல்லவில்லை..
ஈ.பி.ஆர்.எல.எப், புளொட் அமைப்புகளிடம் அந்த குழுவினருக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்பதால் அவர்கள் பெரிதும் நம்பியது ரெலோவைதான்.
“திட்டததை முடிதால் மட்டுமே பணம்” என்று ஏறக்குறைய ஒரு பேரம் போல பேச்சு நடத்திவிட்டு அவர்கள் அமெரிக்கா திரும்பிவிட்டனர்.
அக்குழுவினா கொண்டு வந்த திட்டத்தின் பின்னணியில் சக்தி யாரென்பது இதுவரை மர்மம்தான்.
துணிச்சலான பாச்சல்
இனி சாவகச்சேரி நடவடிக்கைக்கு திரும்புவோம்
30-11-84 அதாவது, முதலாவது தாக்குதல் நடந்து சரியாக இரண்டு வருடம் கடந்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாக்குதலை சந்திக்கப்போவது தெரியாமல் அமைதியாக இருந்தது பொலிஸ் நிலையம்.
தாக்குதல் பிரிவுகள் பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றன.
பொலிஸ் முன்பாக வாகனம் நின்றதும் அதிலிருந்து குதித்து சுட்டுக்கொண்டு முன்னேறினார் ஒரு போராளி.
அவரது பெயா நீயூட்டன் யாழ்பாணத்தில் கொழும்புத்துறையை சேர்ந்தவர். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் படித்தவர்.
நீயூட்டனுக்கு இயக்கப் பெயர் நிக்சன்.
நீயூட்டன் பற்றிக் கூறக்காரணம்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான்.
காவலரனில் இருந்த பொலிசாரை நோக்கி சுட்டுக்கொண்டே சென்ற நீயூட்டன் பொலிசார் திருப்பிச்சுட்டார்கள்.
முதலில் உள்ளே நுழைபவர் கொல்லப்படுவார் என்று தெரிந்தே நீயூட்டன் செயலில் இறங்கினார்.
தற்கொலைப்படை உறுப்பினர் போலவே அவரது நடவடிக்கை அமைந்தது.
நீயூட்டனின் துணிச்சலான பாய்ச்சலால் பொலிசார் திகைத்த நொடியில் ஏனையோர் உள்ளே புகுந்தனர்.
50க்கு மேற்பட்ட பொலிசார் பலியானார்கள். அவர்களில் பலர் இஸ்ரேலியர்களால் பயிற்றுக்குவிக்கப்பட்டவர்கள.
ஆயுதங்களை கைப்பற்றிக்கொண்டு பொலிஸ் நிலையத்தை தகர்த்தது ரெலோ.
யாழ்பாணத்தில் அதுவரை நடந்த தாக்குதல்களில் மிகப்பெரிய வெற்றிகரமான தாக்குதல் அதுதான்.
ரெலோ தலைவர் சிறீசாபாரத்தினம் தாக்குதல் நடைபெற்ற போது தானும் நேரடியாக பங்குகொண்டிருந்தார்.
உதவி தடுக்கப்பட்டது
சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கபபட்ட செய்தி அறிந்து இராணுவ அணியொன்று விரைந்து வந்தது.
அதனை எதிர்பார்த்து கைதடியில் காத்திருந்த ரெலோவினர்
தாக்குதல் நடத்தியதில் 20வதுக்கு மேற்பட்ட இராணுவத்தினர்கள் பலியானார்கள்.
இத்தாக்குதல் ரெலோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக அமைந்தன.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோப் பிரதிகள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு பிரச்சாரமும் களைகட்டியது.
தாக்குதலை வீடியோவில் கண்ட வெளிநாட்டு தமிழர்கள் பலர் சிலித்துப் போனார்கள்.
ரெலோவிக்கு தாராளமாக நிதி வழங்கினார்கள்.
முதன்முதலில் வீடியோவில் எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கையும் அதுதான் என்பதும் குறிப்பிடதக்கது.
அதேவேளை ஈ.பி.ஆர்.எல் அமைப்பால் தமிழ் நாட்டின் பலபாகங்களில் கண்காட்சி குறிப்பிடதக்க ஒன்றாகும்
சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி.சேலம் போன்ற முக்கிய பகுதிகளில் அக்கண்காட்சி நடத்தப்பட்டது.
இலங்கை சுதந்திரமடைந்தது முதல் (1948) 1983வரை தொடர்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தன.
மிகுந்த முயற்சியோடு திரட்டப்பட்ட பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள் போன்றவை பெருமளவில் இடம்பெற்றிருந்தன.
83 கலவரம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட தமிழர்களது உடல்கள்
கண்டதுண்டமாகக் கிடந்த காட்சிகள் புகைப்படங்களில் தெரிந்தன.
இடையே ஒரு கடல் பிரித்தாலும் இதய உணர்வால் ஒன்றுபட்ட மக்கள் அல்லவா தமிழக மக்கள்.
தனாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்களே. துடித்துப்போனார்கள்.
கண்காட்சிக்குச் சென்ற தாய்மார்கள் விழிகளில் கண்ணீரோடும், ஜே.ஆர். அரசுமீது கோபத்தோடும் திரும்பினார்கள்.
தாய்மார்கள் மட்டுமல்ல கண்காட்சியை காணச்சென்ற ஆண்களும் கதறியழுதனர்.
“நாங்களும் வருகிறோம் போராட சேர்த்துக்கொள்வீர்களா” என்று கேட்டவர்கள் பலர்.
அக்கண்காட்சியை தனது கடின உழைப்பால் டே விற்சன்.
தமிழக ஓவியர் சேகர் டே விற்சனுக்கு உதவியாக இருந்தவர்.
ஈழமாணவர் பொதுமன்றத்தின் (G :U :E :S) நிர்வாகச் செயலாளராக இருந்த டேவிற்சனை படையினர் தேடினார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார் டேவிற்சன்.
தமிழ் நாட்டுக்கு சென்ற டேவிற்சன் ஈழமணி என்றபெயரோடு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஈ.பி.ஆர். எல்.எப் அமைப்புக்குள் ஏற்பட்ட உள்பிரச்சனையில் டக்ளஸ் தேவானந்தா அணியோடு நின்ற டேவிற்சன் தற்போது வெளிநாடொன்றில் இருக்கிறார்.
போராளி அமைப்புக்களின் வளர்ச்சியால் அதிர்ச்சியுற்ற இலங்கை அரசு பல்வேறு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தது.
அவற்றில் சில வேடிக்கையானவை. வேறு சில அரசே ஏமாந்து போய் கடைசியில் கைகளை பிசைந்து கொண்டு நிற்க வைத்தவை.
அதில் ஒன்றுதான் நான் இப்போது சொல்லப்போவதும்.
பெலஜியம் நாட்டு விமான நிலையத்தில் இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்தச் செய்தி உடனடியாக இலங்கை அரசுக்கு கிடைத்துவிட்டது.
“ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் தான் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை உடனே கொழும்புக்குக் கொண்டுவர பெல்ஜியம் அரசின் உதவி கோரப்படும்” என்று அரசு தகவல்களை வெளியிட்டது.
பெல்ஜியத்தில் கைதுசெய்யப்பட்டவர் சிறீசாபாரத்தினமா இல்லையா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் குழுவொன்றையும் அரசு அனுப்பிவைத்தது.
இப்படியொல்லாம் அமளியான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த போது ரெலோ தலைவர் சிறீசாபாரத்தினம் என்னசெய்து கொண்டிருந்தார் தெரியுமா?
சென்னையில் சாலிக்கிராமத்தில் இருந்த தமது அலுவலகத்தில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
தமது தலைவர் கைதுசெய்யப்பட்டதாக அரசு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக ரெலோ கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
முல்லையில் தாக்குதல்
1984 இல் நடைபெற்ற மற்றொரு முக்கியமான தாக்குதல் முல்லைத்தீவுக்கருகே இடம்பெற்றது.
அதுபற்றி அடுத்த தொடரில்…
தொடரும்..