பிரித்தானியா விமான சேவைக்கு சொந்தமான விமான ஒன்றின் சக்கரப் பகுதியில் ஒளிந்து பயணம் செய்தவர்களில் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் கவலைக்கிடமாக உள்ளார். இச் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவின் தலைநகரான ஜொகன்னர்ஸ்பேர்க்கில் இருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்ற பிரிடபிரித்தானியா விமான சேவைக்கு சொந்தமான போயிங் 747-ரக விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த விமானமானது நேற்று முன்தினம் புதன்கிழமை மாலையில் புறப்பட்டுச் செனறு சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து ஹீத்ரோவை விமான நிலையத்தையை சென்றடைந்தது.
இந்நிலையில் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ரிஷ்மாண்ட் நகரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
குறித்த நபர் ஜொகன்னர்ஸ்பேர்க்கில் இருந்து ஹீத்ரோ சென்ற விமானத்தின், சக்கரப்பகுதியில் ஒளிந்து இருந்து பயணம் செய்தபோது விழுந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே விமானத்தில் இதுபோன்று விமானத்தின் சக்கரப்பகுதியில் பயணம் செய்த மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கும் அந்நாட்டு பொலிஸார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை குறித்த விமானம் ஜொகன்னர்ஸ்பேர்க்கில் புறப்படுவதற்கு முன்னதாகவே இருவரும், சக்கரம் தமக்கு இடையூறு ஏற்படுத்திவிடாத வண்ணம் உள்ளே பாதுகாப்பாக சென்று இருந்துள்ளனர்.
விமானம் புறப்பட்டு சென்று லண்டன் அடையும் வரையிலும் இருவரும் பாதுகாப்பாக இருந்து உள்ளனர். ஜொகன்னர்ஸ்பேர்க்கில் இருந்து புறப்பட்டு சுமார் 11 மணிநேரத்திற்கு மேலாக, சுமார் 8000 ஆயிரம் மைல் தூரம் இருவரும் விமானத்தின் சக்கரத்திற்கு உள்ளே உள்ள பகுதியில் இருந்து பயணம் செய்துள்ளனர்.
விமானம், ரிஷ்மாண்ட் நகரில் பயணம் செய்தபோது குறித்த நபர்;கள் சுமார் 1,400 அடி உயரத்தில் பயணம் செய்துள்ளதாக விமானத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ஸ்கொட்லாந்து பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், 18ஆம் திகதி காலை 9:35 மணியளவில் ரிஷ்மாண்ட் நகரில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
ரிஷ்மாண்ட்டில் தொழிற்சாலையின் மீது கிடந்த சடலத்தினை ஆய்வு செய்வதற்காக சென்ற லண்டன் வைத்தியசாலை அதிகாரிகளால் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மை தெரிவியரும். இதேவேளை குறித்த நபரின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறன. இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் இருந்து பயணம் செய்த போயிங் 747 ரக விமானத்தில் உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். இதே மாதம் அங்கோலாவில் இருந்து பிரித்தானியா சென்ற, பிரித்தானியா விமா சேவைக்கு சொந்தமான விமானத்தில் இருந்து விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டும் இஸ்தான்பூல் நகரில் இருந்து ஹீத்ரோவிற்கு சென்ற விமானத்தின், சக்கரப்பகுதிக்குள் ஒளிந்து பயணம் செய்தவர் நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.