மும்பை: மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே யோகா பற்றிய வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.எதற்கு எடுத்தாலும் நிர்வாணம், அரை நிர்வாணப் போஸ் கொடுத்து வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதையே வேலையாக வைத்துள்ளவர் மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே. அவர் நடித்த இந்தி படமான நஷா ஓடவலில்லை.படம் ஓடாவிட்டாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் விளம்பரம் தேடிக் கொள்வதில் வல்லவர் பூனம். இந்நிலையில் தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் யோகா விவகாரம் பற்றி பூனம் அறிந்தார்.
யோகா வீடியோ
அடடே ஊர் உலகம் எல்லாம் யோகாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறதே என்று நினைத்த பூனம் உடனே பூனம் ஸ்டைலில் யோகா செய்யுங்கள் என்று கூறி ஒரு யோகா(?) வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.