குடிநீர் எடுக்கச் சென்ற 9 வயது சிறுமிக்கு 100 ரூபா கொடுத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முனைந்த 65 வயது முதியவரை வல்வெட்டித்துறை பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள குறித்த சிறுமி அயல் வீட்டில் குடிநீர் எடுக்கச் செல்வது வழமை.
சம்பவ தினம் வழமை போன்று குடிநீர் எடுக்கச் சென்றபோது அந்த வீட்டில் முதியவர் தனிமையில் இருந்துள்ளார்.
அவ்வேளை, குறித்த சிறுமியை அழைத்து அவருக்கு 100 ரூபா பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகம் செய்ய முனைந்துள்ளார்.
அதனை அடுத்து சிறுமி அவ்விடத்தில் இருந்து தப்பி வந்து தனது பெற்றோருக்கு சம்பவம் தொடர்பில் தெரியபடுத்தி உள்ளார்.
இதனையடுத்து, பெற்றோரினால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரான முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிமையில் பெண் – கட்டிலுக்கு கீழ் இளைஞன் – நடந்தது என்ன?
22-06-2015
கொடிகாமம், மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கட்டிலுக்கு கீழ் ஒளிந்திருந்த 23 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை
ஞாயிற்றுக்கிழமை (21) உத்தரவிட்டார். மாடி வீடான மேற்படி வீட்டில் வீட்டிலுள்ளவர்கள் கொழும்புக்குச் சென்றமையால் பெண் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார்.
சனிக்கிழமை (20) இரவு வீட்டுக்கு அருகில் ஒருவர் நடமாடியதுடன் நாய் கடுமையாக குரைப்பதை அவதானித்த பெண், கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வீட்டுக்குள் கட்டிலொன்றுக்கு கீழ் பதுங்கியிருந்த 23 வயதுடைய இளைஞனைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து குறடு, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.