அன்னைத் தெரசாவின் மறைவுக்குப் பின் அவர் தோற்றுவித்த மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த சகோசரி நிர்மலா காலமானார்.

இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 81 வயதான நிர்மலா, மற்றவர்கள் சூழந்து ஜபம் செய்து கொண்டிருந்த அமைதியான சூழலில் உயிரிழந்தார் என்று கொல்கத்தாவின் பேராயர் தாமஸ் டிசூசா கூறியுள்ளார்.

இவரது மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அன்னைத் தெரசாவின் மறைவுக்குப் பின்னர் 1997 ஆமா ஆண்டு அந்த அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சகோதரி நிர்மலா 12 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

ஆதரவற்றவர்களுக்காக பாடுபட்டு வரும் மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் நிறுவனத்தில் 4500 கன்னியாஸ்திரிகள் பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன.

150623083331_sister_nirmala_body_624x351_bbc

Share.
Leave A Reply