லண்டன்: தனது குட்டிகளை உண்ண வந்த பாம்புடன் கடுமையாகப் போராடி அவற்றை மீட்ட முயல் குறித்த ஒரு பரபரப்பு வீடியோ யூடியூபில் சக்கை போடு போட்டு வருகிறது.
மனிதர்களை விட பாசத்தில் உயர்ந்தவை விலங்குகள். பல நேரங்களில் நாம் அதைக் கண்ணாரக் கண்டுள்ளோம்.
இந்த நிலையில் தனது குட்டிகளைத் தின்ன வந்த பாம்புடன் கடுமையாகப் போராடி அதை மீட்டுள்ளது ஒரு முயல். அந்த முயல், பாம்புடன் தைரியமாக போரிட்ட காட்சி குறித்த வீடியோ யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
வழக்கமாக கீரியும், பாம்பும் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் இதில் முயலும், பாம்பும் அப்படி ஒரு சண்டை போடுகின்றன. இதை இதுவரை 10.6 லட்சம் பேர் பாரத்து்ளனர்.
ஒரு நீண்ட கருப்பு நிற பாம்பு அந்த முயல் குட்டிகளை சுற்றி வளைப்பதாக காட்சி தொடங்குகிறது. இதைப் பார்த்த தாய் முயல் தனது குட்டிகளைக் காக்கும் முயற்சியில் குதிக்கிறது. ஆனால் பாம்பு, தாய் முயலை கொத்த முயல்கிறது.

ஒரு கட்டத்தில் முயலின் கடியிலிருந்து தப்பிக்க முயன்று தப்பி ஓடுகிறது பாம்பு. புல் தரை வழியாக பாய்ந்தோடும் அது சுவர் ஒன்றின் வழியாக ஏறி வெளியேறப் பார்க்கிறது. ஆனால் விடாத தாய் முயல் அந்த பாம்பின் வாலைப் பிடித்து கீழே இழுத்துப் போடுகிறது. மறுபடியும் ஒரு உக்கிரச் சண்டையில் குதிக்கிறது.

தப்பியோட்டம்…
இந்த முறை சண்டையின்போது முயலை பாம்பு கடித்து விட்டதாக தெரிகிறது. ஆனாலும் சற்றும் அஞ்சாத அந்த தாய் முயல் பாம்பை விடாமல் கடித்து தாக்குகிறது. அதன் பின்னர் பாம்பு தப்பி ஓடி விடுகிறது.
எங்கு எடுக்கப்பட்டது…
இந்தப் படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அமெரிக்கா அல்லது இந்தியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எது எப்படியோ வாங்கிய அடியைப் பார்த்தால் மீண்டும் அந்த முயல் குட்டிகள் இருக்கும் பக்கம் திரும்பிக் கூட பார்க்காது அந்த பாம்பு என்பது மட்டும் நிச்சயம்.