ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்­திற்­க­மைய பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12.00 மணிக்கு கலைக்­கப்­பட்­டது. இதன்­பி­ர­காரம் ஏழா­வது பாராளுமன்றத்தின் பத­விக்­காலம் நிறை­வுக்கு வந்­துள்­ளதை வெளி­யா­கி­யுள்ள வர்த்­த­மானி அறி­வித்தல் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

புதிய பாரா­ளு­மன்­றத்தை அமைத்துக் கொள்­வ­தற்­கென ஆகஸ்ட் 17 ஆம் நாள் திக­தி­யி­டப்­பட்­டுள்ள அதே­வேளை, ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்­பகல் 12.00 மணிவரை வேட்­பு­மனு தாக்கல் செய்­வ­தற்­கான காலப்­ப­கு­தியும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­க­வலை அர­சாங்க அச்­சகக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலைவர் காமினி பொன்­சேகா உறுதிப்படுத்தினார்.

நேற்று நள்­ளி­ரவு 12.00 மணி வரையில் நடை­மு­றையில் இருந்து வந்த ஏழா­வது பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கும் புதிய பாரா­ளு­மன்­றத்தை அமைத்துக்கொள்­வ­தற்­கான தேர்­த­லுக்­கான திக­தியை நிர்­ண­யிப்­ப­தற்கும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று மாலை தீர்­மா­னித்­தி­ருந்­த­தாக

தக­வல்கள் வெ ளியா­கி­யி­ருந்­தன. ஜனா­தி­ப­தியின் இந்தத் தீர்­மானம் நள்­ளி­ரவில் வெ ளியா­கிய வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

பாரா­ளு­மன்றம்  கலைக்­கப்­பட்­டதன் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தேசிய அர­சாங்கம் வலு­வற்­ற­தாக ஆக்கப்­பட்­ட­துடன் அனைத்துப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பத­வி­யி­ழந்­த­வர்­க­ளா­யினர்.

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் அமைக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்றம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் கொண்டு பத்து மாதங்க­ளுக்கு முன்­ப­தா­கவே அதா­வது ஐந்து வரு­டங்­களும் இரண்டு மாதங்­களும் கடந்­தி­ருந்த நிலை­யி­லேயே நேற்று நள்­ளி­ரவு ஜனா­தி­ப­தி­யினால் கலைக்­கப்­பட்­டது.

ஜன­வரி மாதம் எட்டாம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றுக் கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ­ரது புதிய பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பத­விப்­பி­ர­மாணம் செய்­து­வைத்தார்.

இத­னை­ய­டுத்து ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட அமைச்­ச­ர­வை­யுடன் தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் கால வாக்­கு­று­தியின் பிர­காரம் நூறு நாள் வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுத்­ததன் பின்னர் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார்.

இத­ன­டிப்­ப­டையில் தேர்தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி ஏப்ரல் 23ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முயற்­சி­களை மேற்­கொண்ட போதிலும் அது கைகூ­டி­யி­ருக்­க­வில்லை. அத்­துடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இருந்­த­போ­திலும் 20ஆவது திருத்தச் சட்டம் என்­கின்­ற­தான புதிய தேர்தல் முறை­மையை நிறை­வேற்­றி­யதன் பின்­னரே பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது என்ற தீர்­மா­னத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இருந்து வந்தார்.

எனினும் புதிய தேர்தல் முறை­மையை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக சாதக நிலைமை காணப்­ப­டா­ததன் பின்­ன­ணி­யி­லேயே நேற்று ஜனா­தி­ப­தி­யினால் பாரா­ளு­மன்றம் கலைக்கப்பட்டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது  தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று நள்­ளி­ரவு 12.00 மணிக்கு வெளி­யா­னது. மேற்­படி வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்றத்தை கலைப்­பது தொடர்­பி­லான அதி­கா­ர­பூர்வ விளக்­கத்­தினை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

வர்த்­த­மானி அறி­வித்­தலில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் எனக்கு குறித்­து­ரைக்­கப்­பட்­டுள்ள தத்­து­வங்­களின் பயனைக் கொண்டு 1981 ஆம் ஆண்டின் ஓராம் இலக்க பாராளுமன்ற தேர்­தல்கள் சட்­டத்தின் 10ஆம் பிரிவின் ஏற்­பா­டு­களை பயன்­ப­டுத்­தியும் இலங்கை    ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய நான் இத்தகைய பிர­க­ட­னத்தின் இன்று (நேற்று வெள்­ளிக்­கி­ழமை) நள்­ளி­ரவு முதல் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து 2015 ஆம் ஆண்டு செப்­ரம்பர் மாதம் முதலாம் திக­தி­யன்று புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைத்துக் கொள்­வ­தற்கு அழைப்பு விடுக்­கிறேன்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திக­தி­யன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தெரி­வு­செய்­வ­தற்­கான பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான திக­தி­யாக நிர்­ண­யிக்­கின்றேன்.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்­பகல் 12.00 மணி­யுடன் முடி­வ­டையும் காலப்­ப­கு­தியை வேட்­பாளர் மனுவை தாக்கல் செய்­வ­தற்­கான காலப்­ப­கு­தி­யாக குறித்­து­ரைக்­கிறேன்.

மேற்­படி காலப்­ப­கு­திக்குள் பெயர் குறிப்­பி­டப்­பட்ட வேட்பு மனுக்கள் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன­வினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு தீர்­மா­னித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று வெள்ளிக்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட மற்றும் முக்­கிய உறுப்­பி­னர்­களை சந்தித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் தென்­பட்­டி­ருப்­ப­தாக நேற்­றைய பாரா­ளு­மன்ற அமர்வின்போதும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தமது உரைகளின்போது குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையிலேயே பாராளுமன்றம் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்று அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி திங்கட்கிழமை  தேர்தல்களுக்கான வாக்களிப்பு  நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனையடுத்து பெரும்பான்மை ஆசனங்களை பெறுகின்ற கட்சி அரசாங்கத்தை அமைக்கும் தகுதியை பெறும் அதேவேளை செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை புதிய அமைச்சரவையுடனான பாராளுமன்றம் அமையவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply