சென்னை: ஒரு சிலர் சொல்லும் வார்த்தைகள் பேசும் பேச்சுக்கள் பிரபலமாகிவிடும் அப்படித்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வார்த்தையும், ‘போலீசை கூப்பிடுவேன்’ என்ற வார்த்தையும் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டது.
டப்மாஸ் முதல் சினிமா வசனம் வரை பட்டையை கிளப்புகிறது. சிவகார்த்திக்கேயன் படத்தில் இந்த வசனத்தை ஒரு பாட்டாகவே பாடி விட்டனர்.
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது விலகிவிட்டார் அவருக்கு பதிலாக நடிகை சுதாசந்திரன் நடத்தி வருகிறார்.
நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியது ஏன் என்பது பற்றியும் எந்த சூழ்நிலையில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றும் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ப்ளீஸ் கிண்டல் வேண்டாம்
தயவு செய்து யாரும் இனிமே ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’னு கிண்டல் பண்ணாதீங்க. அந்த டயலாக் நான் எந்தச் சூழ்நிலையில் சொன்னேன்னு தெரிஞ்சா, நீங்களும் சொல்ல மாட்டீங்க. ஒரு அப்பாவிப் பொண்ணுக்கு ஒருத்தன் எட்டு முறை குழந்தை உண்டாக்கிட்டு கருக்கலைப்பு செஞ்சிருக்கான். அதை நிகழ்ச்சியில் கேட்டப்போ வேதனையிலும் இயலாமையிலும், ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா?’னு ஆதங்கத்துல சொன்னேன்.
கொலை மிரட்டல் வந்தது
நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட ஒரு மோசமான பையன், போன்ல எனக்கு கொலை மிரட்டல் விடுத்தான். நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் போய் புகார் கொடுத்தேன். உடனே நிகழ்ச்சியின் இயக்குநர் என்னை கண்டபடி பேசினார். அப்பவே அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகியிருக்க வேண்டியது. ஆனா, சேனல் தரப்பில் இருந்து சமாதானம் பண்ணாங்க. ஆறு மாசம் நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தேன்.
இயக்குநர் தரப்பில் சிக்கல்
அமெரிக்காவில் இருக்கும் மகளைப் பார்க்க போவதால் ஒரு மாதம் ஒளிபரப்பும் அளவுக்கு நிகழ்ச்சியை எடுத்து வச்சுக்கங்கன்னு நான் சொன்னேன். டைரக்டர் கிட்ட மூணு மாசத்துக்கு முன்னாடியே சொல்லியும் அவங்க கேட்கலை. ‘எடுத்து வெச்சுட்டோம்… எடுத்து வெச்சுட்டோம்’னு அவர் சொல்லிட்டே இருந்தார்.
விலகியது ஏன்?
கடைசி வரை ஒரு எபிசோடுகூட முன்கூட்டியே ஷூட் பண்ணலை. திடீர்னு, நீங்க அமெரிக்கா போகக் கூடாது. நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கணும்னு சொன்னாங்க. நான் முடியாது என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து விலகிட்டேன்.
அம்மணியில் பிசி
நான் இருந்த வரை நிகழ்ச்சியை நல்லா நடத்தினேன். அந்த சந்தோஷம் போதும் எனக்கு என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். டிவி நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றாலும் அம்மணி படத்தை இயக்குவதில் பிசியாகவே இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.