டுனீசிய நாட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டலொன்றின் மீது ஆயுதாரி நடத்திய தாக்குதலில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ளனர். குடைக்குள் துப்பாக்கியை மறைத்து வந்தே இத்தாக்குதல் நட த்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அந்நாட்டின் கரையோர நகரான ‘சூஸ்’ இல் இத்தாக்குதல் நட த்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளவர்களில் பிரித்தானியர்கள் , ஜேர்மனியர்கள் , பெல்ஜியம் மற்றும் டுனிசிய வாசிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.a
பிரித்தானியர்களே மேற்படி தாக்குதலில் பிரதானமாக இலக்குவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் தாக்குதலில் 36 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.
முதலில் கடற்கரையோரம் துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ள ஆயுததாரி பின்னர் ‘ரியு இம்பேரியல் மர்ஹாபா ‘ ஹோட்ட லுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர் பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஆயுத தாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.