தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிருஸ்ண லீலைகள் புரிந்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கோழி முட்டையிட்டது போல் ஏனைய கட்சி உறுப்பினர்கள் போடும் ஒரு முட்டையைப் பற்றி கொக்கரித்து ஊரையே கூப்பிடும் ஊடகங்கள் ஆமை அமசடக்கா ஆயிரம் முட்டையிட்டு விட்டு செல்வதைக் கண்டு கொள்வதில்லை.
துணுக்காய் கொல்லவிளாங்குளத்தில் ஜெகசுதன் எனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் அப்பகுதியில் வசிக்கும் 53 பெண்களை வாழ்வாதாரம் தருவதாகவும் வீடமைப்புக்கு உதவி புரிவதாகவும் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்து அவர்களை ஏமாற்றி பாலியலுறவு கொண்டுள்ளது அதனை தனது கைத்தொலைபேசியில் எடுத்துள்ளதும் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவனுடன் தொடர்பில் இருந்த இரு குடும்பப் பெண்கள் அவமானம் தாங்காது தற்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கடும்கோமுற்று ஜெகசுதனைத் தேடியபோது அவன் இன்றுவரை அவர்களின் கைகளில் அகப்படாது மாயமாகிவிட்டான்.
இவனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து நீக்கவும் இவன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் இவனை சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கவும் கோரி பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவை. சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்திருந்தனர்.
குறித்த பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்லவிளாங்குளம் சென்று ஜெகசுதனால் பாதிக்கப்பட்டவர்களையும் அப்பகுதி மக்களையும் நேரடியாகச் சந்தித்திருந்தனர்.
அதன் பின்னர் மாவை.சோனாதிராசாவைச் சந்தித்த போது சேனாதிராசா அவன் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துவிட்டு பின்னர் அது பற்றி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது அவர்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக பெண்கள் அமைப்பு பிரதிநிதி ஒருவர் சேனாதிராசாவிடம் கேட்ட போது அந்த பிரதிநிதிக்கு வாழ்வாதார நிதியாக ஒருலட்சம் ரூபா தருவதாகக் கூறி குறித்த சம்பவத்தைப் பற்றி கருத்தில் எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்ததாக அப் பெண்கள் அமைப்புப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் கொலையை அரசியலாக்கி அதை வைத்து வியாபாரம் செய்ய முற்படும் கூட்டமைப்பு தலைமைகள் குறித்த கொல்லவிளாங்குள சம்பவத்தை மூடி மறைப்பது ஏன்? மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்தும் கூட்டமைப்பை மக்கள் தட்டிக் கேட்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
திட்டமிட்டு எங்களுடைய கலாச்சாரத்தை மற்றவர்கள் அழிக்கிறார்கள் என ஓலமிடும் கூட்டமைப்பு எம்பி.கள் இது பற்றி வாய் திறக்காதது ஏன்?
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினரான கொல்லவிளாங்குளம் வவுனிக்குளத்தைச்சேர்ந்த சோதிராசா ஜெயசுதன், 50க்கும் அதிகமான பெண்களுடன் தகாத உறவுகொண்டு அதனை காணொளியாக பதிவுசெய்து வைத்திருந்துள்ளார்.
அக்காணொளிகளை குறித்த பெண்களுக்கு காண்பித்து மிரட்டி, மீண்டும் மீண்டும் அப்பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
போதாக்குறைக்கு அக்காணொளிகளை தனது நண்பர்களுக்கும் அவ்வப்போது காட்டி பொழுதுபோக்கியுள்ளார். ஜெயசுதனின் நண்பர்களில் ஒருவர் ஜெயசுதனின் கைப்பேசியை திருடி அதில் பதிவுசெய்யப்பட்டிருந்த பாலுறவு காணொளிகளை இறுவட்டாக பதிவு செய்து மல்லாவி, துணுக்காய் பிரதேசம் முழுவதும் பரப்பிவிட்டார்.
ஜெயசுதன் தனது கைப்பேசியில் பதிவுசெய்து வைத்திருந்த 25க்கும் மேற்பட்ட காணொளிகளை அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதனால் குறித்த காணொளிகளில் ஜெயசுதனுடன் இணைந்திருந்த யுவதி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இவ்விரு சம்பவங்களாலும் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகின்றது.