எனக்கு இடுப்­புக்குக் கீழ உணர்வு இல்­லா­த­தால ஷெல்லோ குண்டோ விழும் போது கண­வ­ரையும் பிள்­ளை­யையும் பங்­க­ருக்க அனுப்­பிட்டு என்­னைச்­சுத்தி ஒவ்­வொரு உயிரும் உட­லமும் பறக்கும் போது பார்த்து பார்த்தே பித்­துப்­பி­டித்­த­வ­ளாகி விட்டேன்.

யுத்தம் …! மூன்று தசாப்தம் கடந்தும் நீடித்­தது. துய­ரங்கள் பல துன்­பங்கள் பல. இழப்­புக்கள் எண்­ணிடங்காதவை. எனினும்  எவரும்  எள்­ளி­ந­கை­யா­டாத வகையில் வடக்கு மக்கள் தமது உழைப்­பினை மட்­டுமே நம்பி உள்ளத்தில் சோர்­வில்­லாது வரு­மா­னத்­திற்கு ஏற்ப தன்­மா­னத்­துடன் தமது வாழ்வை கெள­ர­வ­மாக தொடர்ந்ததை மறுப்பார் யாரும் இல்லை.

இந்த நிய­திக்குள் கூலித்­தொ­ழி­லா­ளியை திரு­மணம் செய்­தாலும் நிறை­வான வாழ்வு வாழ்ந்­த­துடன் ஆசைக்கொரு பெண்ணும் ஆஸ்­திக்கு 3 ஆணு­மாக, நான் மக்கட் செல்­வத்­தோடே சந்­தோ­ஷ­மாக இருந்­த­வர்தான் தற்­போது 45 வய­தாகும் ஜெய­வர்த்­தனா சந்­தி­ர­மதி.

கோர யுத்­தத்தில் குடும்ப வாழ்க்­கைக்கு எம­னாக எங்­கி­ருந்தோ வந்­தது அந்த ஷெல். சிறு நொடியில் சின்னா பின்­ன­மா­கி­யது அவ­ரது மனம்­நி­றைந்த குடும்ப வாழ்க்கை.

இன்றும் இழந்த வாழ்க்­கையை தேடி தேடி அலை­கிறார் அப்­பெண்­மணி. வட்­டக்­கட்சி 5ஆம் வீட்­டுத்­திட்­டத்­தி­லுள்­ளவர் நிழ­லாகி மறைந்த வாழ்க்­கையை எம்­மிடம் இவ்­வாறு கூறினார்.

‘பிரச்­சினை உச்சக் கட்­டத்தை அடைந்து வரும்­போது இடம் பெயர வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்டு விட்­டது. கடைகள் எல்லாம் பூட்டு. சாமான்கள் எதுவும் வன்­னிக்கு வரு­வ­தில்லை.

ஒரு நேரச்­சாப்­பாட்­டிற்கே திண்­டா­டிய நேரத்­தில தாகத்­திற்கு தண்ணி குடிக்க கிணத்தில் தண்ணி அள்ளும் போது கிணத்­துக்­கட்­டுக்கு அரு­கில இர­ணை­ம­டு­வில இருந்து அடிச்ச ஷெல் ­வந்து விழுந்­தது. ஷெல்­ வி­ழுந்த அதிர்ச்­சி­யில நான் நினை­வி­ழந்து கிணத்­துக்­குள்ள விழுந்­திட்டேன்.

ஷெல் சத்தம் எல்லாம் ஓஞ்ச பின்தான் என்னை வீட்­டுக்­கா­ரரும் அய­ல­வரும் தேடிப்­பார்த்­தபோதே நான் கிணத்­துக்க விழுந்­தது தெரியும்.

தண்ணி குறை­வான கிணறு என்­ப­தாலும் என் சட்டை படிக்­கட்­டில சிக்கி இருந்­த­தாலும் நான் தாழ­வில்லை. ஆனால் விழுந்த  அமுக்­கத்தில் முள்­ளந்­தண்டு பாதிக்­கப்­பட்­டதால் எனக்கு இடுப்­புக்குக் கீழ் இயக்கம் இல்லாமல் போய்­விட்­டது.

என்னை கிணத்­திற்கு வெளியே தூக்­கவோ முத­லு­தவி செய்­யவோ மருத்­து­வமோ ஆள­ணியோ இல்­லாத நிலையில் இடம்­பெ­யர ஆயத்­த­மாகி உட­மை­களை கொட்டி விட்டு சாக்கு கட்டி என்னை தூக்கி எடுத்­தனர்.

என்னை வெளி­யி­லெ­டுத்து சிறிது நேரத்தில் வந்த பக்­கமே ஷெல் திரும்பி வர என்ர உயி­ரைக்­காப்­பற்ற வேண்டிய பிள்­ளை­யையும் கூட்டிக் கொண்டு என்­னையும் சுமந்து கொண்டு கணவர் இடம்­பெ­யரத் தொடங்கினார்.

showImageInStoryமெல்ல மெல்ல தொண்டு நிறு­வ­னங்­களின் உத­வி­யுடன் வயித்­தையும் நிரப்பி உயி­ரையும் பிடித்­துக்­கொண்டு வந்த எமக்கு ஒரு கட்­டத்தில் தொண்டு நிறு­வ­னங்­களும் எம்மை கைவிட்டு இடம்­பெ­யர்ந்து போக இடமில்லாதும் முள்­ளி­வாய்க்கால் பம்­ப­மடு பகு­தியில் பாது­காப்பு வலயம் என அறி­விக்­கப்­பட்ட பயங்­கர வலயத்­திற்குள் தஞ்சம் புகுந்து விட்டோம்.

எனக்கு இடுப்­புக்குக் கீழ உணர்வு இல்­லா­த­தால ஷெல்லோ குண்டோ விழும் போது கண­வ­ரையும் பிள்ளையையும் பங்­க­ருக்க அனுப்­பிட்டு நான் என்­னைச்­சுத்தி ஒவ்­வொரு உயிரும் உட­லமும் பறக்கும் போது பார்த்து பார்த்தே பித்­துப்­பி­டித்­த­வ­ளாகி விட்டேன்.

ஒரு கட்­டத்தில் நான் ஏன் இருக்க வேண்டும் செத்தால் என்ன என்று தோன்றும் போது என் அரு­கில ஷெல் விழுந்து வெடிக்க நின்­றநான் எனனென்டு கீழ விழுந்­த­னென்று தெரி­யாது.

குப்­பிற விழுந்­த­தில நெத்­தி­யி­லையும் காயம் ஏற்­பட்­ட­தோட காலும் முறிஞ்சு போச்சு. எனக்கு உணர்வு இல்­லா­த­தால கால் முறிஞ்­சது தெரி­யாது.

கண­வரும் பிள்­ளை­களும் தான் கால்­மு­றிஞ்சு தொங்­கு­வதை பார்த்து என்னை ஹொஸ்­பிஸ்­ட­லுக்கு கொண்டு போனார்கள்.

அங்கும் ஒழுங்­கான மருத்­துவம் இல்லை. கிடைத்த மருந்துப் பொருட்­களை வைத்து (பி.ஓ.பி.) போட்டு விட்­டார்கள். இப்­பவும் பொருந்தி இருக்கா இல்­லையா என்று எனக்கும் தெரி­யாது.

யாருக்கும் தெரி­யாது. காரணம் இடுப்­புக்குக் கீழ உணர்வு இல்லை. தொடர்ந்து வீல் சிய­ரி­லதான் இருக்­கிறன்….. என அவ்­வ­ளவு சோகத்­தையும் இனி­மை­யாக பேசி விட்டு மெள­ன­மாக சிரித்தார்.

நான்கு பிள்­ளை­க­ளோட ஐந்­தா­வ­தாக என்­னையும் சுமந்த கணவர் முகா­மூ­டாக மீள்­கு­டி­யேற்றும் என்ற பெயரில் சொந்த வீட்­டிற்கு வந்தோம். வீட்­டைச்­சுற்றி பற்­றைகள் வளர்ந்­தி­ருந்­தன. மண் வீடு­தானே கறை­யானும் பாம்பும் புற்­றெ­டுத்து தமது வரி­சையை காட்டி இருந்­தன.

முகா­மில இருந்த தறப்பா­ரோட வள­வில ஒரு ஓர­மாக குடி­யே­றிய நாங்கள் மெது­வாக கண­வரும் மூத்த மக­னு­மாக வீட்ட துப்­ப­ர­வாக்கி பற்­றை­களை வெட்டி மீள்­கு­டி­யே­றினோம்.

showImageInStoryபிறகு இந்­திய வீட்­டுத்­திட்­டப்­ப­திவு கிடைத்­தது. அத­னூ­டாக தந்த பணத்தில் கண­வரும் மூத்­த­ம­கனும் இரண்டு கூலி­யா­ளாக நின்று ஒரு­வரை தினக்­கூ­லிக்கும் அமர்த்­தி­யதில் கிடைத்த பணத்­திற்கு அள­வான வீட்­டைக்­கட்டி முடித்து விட்டோம்.

வீடு கட்டி சொற்ப நாட்­களில் மூத்த மகள் 24வயது திரு­மணம் முற்­றாகி வந்­தது. எம்­மிடம் அவாக்­கென கொடுப்­ப­தற்கு காது தோடோ நகையோ ஏன் மாற்­று­டுப்பு கூட இல்லை.

நாம் இழந்­த­வற்­றுக்கு கிடைத்த நிவா­ர­ண­மாக வீட்டை மட்டும் கொடுத்து திரு­மணம் செய்து கொடுத்து விட்டோம். அவாக்கு வீட்ட கொடுத்து விட்டு நாங்கள் பழைய மண்­வீட்­டில இருக்­கிறம்.

மூத்­தவர் உயர்­தரம் படித்து விட்டு இப்ப நைற்­றாவில் எலக்­றீ­சியன் கோஸ் படித்­திட்டு வேலை தேடிட்டு இருக்கிறார். ஆனால் தெரிந்­த­வர்கள் வீடு கட்ட அல்­லது வயல்­வே­லைக்கு கூப்­பிட்டால் தினக்­கூ­லிக்கு போறவர்.

கண­வ­ருக்கு இப்ப 55வயது. மூன்­றா­வது நான்­கா­வது மகன்மார் வட்­டக்­கச்சி மகா வித்­தி­யா­லய மற்றும் மாய­வனோர் மகா வித்­தி­யா­ல­யத்­தில படிக்­கினம்.

கண­வ­ருக்கு தற்­போது உடல் நிலை ஏலா­ம­லேயே இருக்­கி­றது. கணவர் வீட்டுத் தோட்டம் என்று கொஞ்ச பயிர் போட்­டி­ருக்­கிறார். நாளாந்தம் கிடைக்கும் காய்கறி­களை கடைக்கு கொடுத்தே அன்­றாடம் நாங்கள் வீட்டில் உண­வுண்போம்.

எங்­க­ளுக்­கென்று கிண­றில்லை. காணியின் ஓரத்­தில இடம்­பெ­யர முன் இருந்த மண்­கி­ணறு ஒன்று இருக்கு. அது வருசா வருசம் மண் கொண்­டு விழுந்து தூர்ந்து வரு­கி­றது. அதில வாளி­யால அள்ளி அள்­ளியே பயிர்­க­ளுக்கு ஊற்றி வரு­கிறோம்.

வெய்­யி­லுக்கு முதல் காலை 4மணிக்கே கணவர் தண்ணி ஊத்தத் தொடங்கி விடுவார். மாதம் ஒரு முறை பைப்­புகள் மற்றும் மோட்­டாரை வாட­கைக்கு எடுத்து தோட்­டத்­துக்கு தண்ணி கட்­டுவம்.

மூன்­றா­வது மகன் ஆண்டு 8 படிக்­கிறார். ரியூஷன் போறார். மாதம் 2 ஆயிரம் ரூபா எல்­லாப்­பா­டத்­துக்கும் கட்­டிப்­ப­டிப்­பிப்பம்.

ஆனால் இப்ப இளை­யவர் இந்த வருசம் கொலசிப் எடுப்­ப­தால ரியூஷன் போக வேண்­டிய நிலை­யில மற்­ற­வற்ற ரியூ­ஷனை நிப்­பாட்டி போட்டம். ஒவ்­வொரு நாளும் படிக்­கேக்க அழுவான்.

தனக்கு பாடம் விளங்­கேல்ல சொல்லித் தாங்கோ என்று. நாங்­களும் பெரி­ய­ள­வில படிக்­கேல்ல. மகள் திரு­மணம் செய்து போட்டா. மூத்­தவர் வீட்­டில இருந்தா சொல்லிக் கொடுப்பார்.

அவரும் தினக்­கூ­லிக்கு போட்டு நாள்­பூ­ராவும் வெய்­யில்ல நின்­றிட்டு வாற­தால வந்த உடனே சாப்­பாடு இருந்தா சாப்­பி­டுவான் இல்லை என்றால் தின்­னாமல் தூங்­கி­டுவான்.

இப்­ப­டியே எங்க கஷ்­டத்தை சொல்­லப்­போனால் அத்­தி­யாயம் அத்­தி­யா­ய­மாக கூறலாம். என்ன செய்­ரது சொல்ல மனசு இருக்கு. ஆனால் கேட்­கவோ, உத­வவோ நாதி­யற்­ற­வர்­க­ளாக நாங்கள் இருக்­கிறம்.

இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக நான் தொடர்ந்து வீல் சிய­ரில இருப்­பதால் இடுப்­புக்குக் கீழ் பின்­பக்கம் பெட்சோர் மாறி மாறி வரு­வ­துடன் திண்­ணையில உறங்­கு­வதால் எறும்­புகள் கடித்து, தூசுகள் படிந்து கால்கள் இரண்டும் மாறி மாறி அவிந்து விடும்.

எனக்கு நோ தெரி­யா­த­தால வேதனை தெரி­யாது. ஆனால் என்னை பார்த்து என்ர குடும்பம் தினம் தினம் மன­துக்குள் அழு­வது எனக்கு தெரியும். ஆனால் நான் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்­வ­தில்லை.

வாழ்க்­கைல்ல எல்­லா­வற்­றயும் இழந்து விட்டோம். இனி இழப்­ப­தற்கு எது­வுமே இல்லை. அதிலும் இழந்தவற்றை கூறிக் கூறி வாய் வலித்து விட்­டதே தவிர நிவர்த்தி செய்ய இந்த அரசோ அல்­லது அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களோ ஏன் அர­சியல்வாதி­களோ முன்­வ­ர­வில்லை.

அவ்­வா­றான நிலை­யில நான் நால்வர் உயிர்­வாழ மக்­க­ளிடம் பகி­ரங்­க­மாக உதவி கேட்­கிறோம். முடிந்தால் இந்த அப­லத்தாய் உயி­ரோடு இருக்கும் போது பிள்­ளை­களை நல்­வ­ழிப்­ப­டுத்த உதவி செய்­யுங்கோ.

அதா­வது என்ர மூத்­தவர் எலக்­றீ­சியன் கோஸ் செய்­திட்டார். ஆனால் அவர் வேலைக்கு போனால் வேலை குடுப்­ப­தற்கு எந்த இடமும் இல்ல காரணம் இருக்­கிற வேலை கிடைப்­பது குறைவு அத­னால இவரை வச்சு எப்­படி சம்­பளம் தாறது என்று அவர்கள் கூறுவர்.

ஆனால் இப்ப எங்­க­ளுக்கு உழைத்து எங்­களை பார்க்­கக்­கூ­டிய ஒரே ஒரு உறவு மகன்தான். எனவே அவ­ருக்கு ஒரு கடை போட்டு யாரா­வது கொடுத்தால் அந்­தப்­பணம் நான்கு உயிர்­களை வாழ வைக்கும்.

அதேபோல் கண­வ­ருக்கு நெஞ்சு வருத்தம் இருக்கு. தொடர்ந்து கிணத்­தில தண்ணி அள்ளி நீர் ஊற்­று­வதால் நாளுக்கு நாள் நோயாளி ஆகிக்­கொண்டே போறார்.

அதை விட மண் கிணறு தூர்ந்து வரு­வதால் அயல்­கா­ணியில் எல்லை வரை மண் இடிந்து போய்­விட்­டது. இதனால் அயலவர்களுடன் சற்று மனஸ்தாபம். எனவே கிணறையும் சுற்றி வர பூச்சுப்பூசி கட்ட யாராவது உதவி செய்வீர்கள் என நம்புகிறோம்.

நாம் எப்படியோ உழைத்து உயிர்வாழ்வோம். அதேபோல் மாதத்திற்கு ஒரு முறை ஒரு நீர்ப்பம்பியும் பைப்பையும் வாடகைக்கு எடுப்பதால் மரக்கறியால வாற காசு காணாது.

எனவே ஒரு மோட்டார் வாங்கி தந்தால் எமது சிறிய கால வாழ்க்கைகூட மெதுவாக சுமையின்றி நகர்ந்து செல்லும் என்கிறார்.

மனித வாழ்வில் நீர்த் தேவை அவசியமான ஒன்றாகும். அது நீரால் ஒரு குடும்பமே வாழ முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றது. தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தார்மீக கடமை என்பதற்கிணங்க தரணியில் வாழ தவிக்கும் இவர்களுக்கு தண்ணீர் வசதிக்காக உதவி அளிப்பது அவசியம் அல்லவா?

Share.
Leave A Reply