ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
பஞ்ச ஈச்சரத்தில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸவரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 16.06.2015 அன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 13 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா 28.06.2015 அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
வேட்டைத்திருவிழாவானது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வினோதமான முறையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அடியார்கள் வருகை தந்து வேட்டைத்திருவிழாவில் பங்கேற்று வருவதோடு வேட்டையானது ஒவ்வொருவரும் தங்கள் ஆடைகளை வாகங்குழை அணிந்து கரி பூசி தங்கள் நேர்த்தியினை செய்து வருகின்றார்கள்.
ஆந்த வகையில் இந்த ஆண்டும் வேட்டைக்கு 3000 திற்கும் மேற்பட்ட அடியார்கள் பங்கேற்று நேர்த்தியில் ஈடுபட்டுள்ளடை குறிப்பிடத்தக்கது.