மலைப்பாம்பொன்று முள்ளம்பன்றியொன்றை விழுங்கியபின் அம்முள்ளம் பன்றியின் முட்களால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
தென் ஆபிரிக்காவின் எலான்ட் கேம் வனவிலங்கு பூங்காவில் மேற்படி முள்ளம்பன்றியைக் கண்ட மலைப்பாம்பு அது தனக்கு சிறப்பான உணவாக இருக்கும் என எண்ணியதுபோலும். ஆனால், அம்மலைப்பாம்பின் கடைசி உணவாக அந்த முள்ளம்பன்றி அமைந்தது.
13 அடி நீளமான மலைப்பாம்பு, முள்ளம் பன்றியை விழுங்கி தனது வயிற்றுக்குள் திணித்துக்கொண்டது.
அதன்பின் அம்முள்ளம்பன்றியின் உடலிலுள்ள முட்களால் பாம்பின் வயிறு குத்தப்பட்ட நிலையில் அம்பாம்பு இறந்துகிடந்தது.
இம்மலைப்பாம்பு உயிரிழந்தமைக்கான சரியான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை எனவும் எனினும், அதன் உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்திக் கிழிக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டன எனவும் மேற்படி வன விலங்குப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.