இந்திய கிரிக்கெட் வீரர்களை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய விளம்பரமொன்றை பங்களாதேஷ் பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

குறித்த விளம்பரத்தில் இந்திய அணியின் வீரர்களின் தலையில் ஒரு பக்கம் மாத்திரம் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலே விளம்பரப் பலகையில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர் முஸ்டபைசூர் ரஹ்மான் சவரக் கத்தியுடன் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த து.
இந்தியாவுக்கு எதிராக அந்த அணி தொடரை வென்றது இதுவே முதல் முறையாகும். இத்தொடரில் சிறப்பாக பந்துவீசிய  முஸ்டபைசூர் ரஹ்மான் 13 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

112389

இந்நிலையிலேயே இவ்வாறானதொரு விளம்பரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரெஹானே, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரவிந்தர் ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஷிகர் தவான் மற்றும் அஸ்வின் ஆகியோரோ அப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இவ்விளம்பரத்துக்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதேபோல பங்களாதேஷ் ரசிகர்கள் பலரும் குறித்த விளம்பரத்தை பெரிதாக விரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

பல பங்களாதேஷ் ரசிகர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

112389_2

Share.
Leave A Reply