மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணிக் கிராமத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரின் 62 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை மேற்படி சிறுமி விளையாடி விட்டு வீடு செல்லும் வழியில் சந்தேக நபரான இந்த வயோதிபர் அயலிலுள்ள பற்றைகளுக்குள் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அவ்வேளையில் பாதிப்பிற்குள்ளான சிறுமி கூக்குரலெழுப்பவே அக்கம்பக்கத்தால் சென்றவர்களின் உதவியுடன் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்;.
இச்சம்பவம் தொடர்பில் வயோதிபர் செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சந்தேக நபரான வயோதிபருக்கு எட்டுப் பிள்ளைகள் உள்ளனர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.