யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் இணையத்தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மாணவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனால் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் படி யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் கணனி விளையாட்டுகளை விளையாடுவதற்கும் அப்பிரதேசத்திலுள்ள இணைய சேவை வழங்கும் மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிக அவசிய தேவைக்காக செல்ல வேண்டி ஏற்படின் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் அவ்வாறான இடத்திற்கு செல்ல வேண்டும்.
அவ்வாறு சமூகம் தராத மாணவர்களை தமது நிலையத்தில் அனுமதிக்கும் பட்சத்தில் அந்நிலைய உரிமையாளரை கைது செய்யுமாறும் நீதிமன்றம் இவ்வுத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
யாழில் உள்ள இன்ரர் நெட் கஃபேக்களில் 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் , தமது ஜோடிகளோடு சென்று காதல் லீலை புரிந்து வருகிறார்கள்.
இதற்கு ஏற்றால் போல் தான் யாழ் இன்ரர் நெட் கஃபேக்கள் அமைக்கப்பட்டும் உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கம்பியூட்டரும் அமைந்திருக்கும் மேசை , மூடி மறைக்கப்பட்டு ஒரு சிறிய அறைபோல உள்ளது.
இதனால் அதனுள் சென்று பூட்டிக்கொண்டால் வெளியே நிற்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது.
பள்ளி நேரங்களில் தனது காதலியை அல்லது காதலனை அழைத்து வரும் மாணவர்கள். உள்ளே சென்று பூட்டிக்கொள்கிறார்கள்.
அங்கே அவர்கள் பல்லான பலான படங்களை இன்ரர் நெட்டில் பார்த்துவிட்டு , காதலியோடு சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்கள்.
இதன் காரணமாக ஒரு வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்துள்ளது. மாணவி ஒருவரை இவ்வாறு அழைத்துச் சென்ற 16 வயது மாணவர் அவரிடம் தப்பாக நடக்க முயன்றதாக மாணவி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி இளஞ்செழியான் கண்டும் ஆத்திரமடைந்தார்.
இதன் மூலம் மாணவர்கள் பிழையான வழியில் இட்டுச் செல்லப்படுவதாகவும் தகவல் கிடைத்ததை அடுத்தே இத்தடையுத்தரவிற்கு காரணமாகும்