இலுப்பக்கடவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகி மற்றுமொரு சிறுமி காயமடைந்துள்ளார்.
மன்னாரில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி எதிர்திசையில் வந்த வேன் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுமி உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில் சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தை அடுத்து வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகியோர் மடுத் திருத்தல ஆடித் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.