லண்டன்: பதினான்கு வயதே ஆன சிறுவனுடன் பாலுறவு கொண்டாதால் 31 வயது பெண் கர்ப்பமுற்றுள்ள சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைர் பகுதியை ஒட்டியுள்ள ஹேர்வுட் ரைஸ் பகுதியை சேர்ந்தவர், கெர்ரி ஹார்ஸ்ஃபால்.
இவருக்கு வயது 31. இங்குள்ள முதியோர் காப்பகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த அந்தப் பெண்ணுக்கு அருகாமையில் வசிக்கும் 14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
ஒரு நாள் அந்தச் சிறுவனுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவனை முத்தமிட்டுள்ளார்.
பின்னர் தொடர்ந்து அவனுடன் பழகிய ஹார்ஸ்ஃபாலுக்கு அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு பாலுறவு வரை சென்றுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தனிமை கிடைக்கும் போதெல்லாம் அவனுடன் உல்லாசமாக இருப்பதில் கள்ளத் தனமாக மகிழ்ச்சி அடைந்து வந்துள்ளார் ஹார்ஸ் பால்.
அதே போல தனது பள்ளியில் செக்ஸ் கல்வியின் போது விழிப்புணர்வுக்காக வழங்கப்பட்ட ஆணுறைகளை சேகரித்துக் கொண்டு சிறுவன், ஹார்ஸ் பால் வீட்டுக்கு அதிகம் சென்று வந்துள்ளான்.
அவனது போக்கு, பெற்றோரின் மனதில் சந்தேகத்தை உண்டாக்கியது. ஒருநாள், அந்த சிறுவன் வீட்டில் இல்லாத வேளையில் அவனது லேப்டாப்பை ஆய்வுசெய்த அவர்கள் திகைத்துப் போயினர்.
இருவருக்கும் உள்ள சமூக வலைத்தளப் பக்கத்தில், ஆபாச நடையில் சுமார் 1700 மெஸேஜ்கள் அதில் பரிமாறப்பட்டிருந்துள்ளன.
உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்ட அவர்கள், ஒன்றும் அறியாத சிறுவனை அந்தப் பெண் சீரழித்துவிட்டதாக புகார் அளித்தனர்.
அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீசார், மூன்று குற்றப் பிரிவுகளின்கீழ் அவள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளியை ஐந்தாண்டு சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தற்போது கர்ப்பிணியாக இருக்கும் ஹார்ஸ்ஃபாலை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.