சென்னை: நடிகர் விஜய் இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்த செய்தி திரை உலகம் மட்டுமில்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருவார்கள். இவ்வாறு நோன்பு இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இப்தார் விருந்து அளித்து, அவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வது அண்மைக்கால வழக்கம்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது ரம்ஜானை முன்னிட்டு 100 இஸ்லாமியர்களை அழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்துள்ளார். விருந்து கொடுத்ததுமில்லாமல், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தியுள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ‘புலி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்கள். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது