திருவண்ணாமலை அருகே, மூன்று வயதான சிறுவனுக்கு, தாய் மாமன் உள்ளிட்டோர், பீர் ஊற்றிக் கொடுத்து, அட்டகாசம் செய்த கொடூர காட்சிகள், நேற்று, மாநிலம் முழுவதும், ‘வாட்ஸ் ஆப்’பில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடுமையில் ஈடுபட்ட, ஐந்து பேர் கும்பலில், இருவரை, போலீசார் கைது செய்தனர்.

சிறுவனுக்கு பீர் ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து, கூடவே சிக்கனும் சாப்பிட வைத்து, அந்த சிறுவனை சுற்றி, சில வாலிபர்கள் மகிழ்ச்சியும், ஆரவாரமுமாக கைகொட்டி சிரிக்கும் வீடியோ காட்சி, ‘வாட்ஸ் ஆப்’ மூலம், நேற்று, மாநிலம் முழுவதும் தீயாக பரவியது.

மேலும், புகையிலையை, கையில் தேய்த்து, வாய்க்குள், சிறுவன் திணிக்கும் காட்சியும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

child-tasmac-2aa

அதிர்ந்த போலீசார்:

அந்த இடத்தில், ‘டி.என்.25.ஏ.ஜே–8209’ என்ற எண்ணுள்ள பைக் நிறுத்தப்பட்டிருந்ததும், வீடியோ காட்சியில் தெரிந்தது. ‘வாட்ஸ் ஆப்,’ ஆயிரக்கணக்கானவர்களுக்கு பரவி, கடைசியில், தி.மலை போலீசாருக்கும் வர, பார்த்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை, எஸ்.பி., பொன்னி உத்தரவின் படி, டி.எஸ்.பி., கணேசன் தலைமையில், மூன்று தனிப்படை போலீசார், விசாரணையில் இறங்கினர்.

பைக் எண்ணை வைத்து விசாரித்ததில், கடலாடி அருகே உள்ள, மேல் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, ஏழுமலைக்கு சொந்தமானது என, தெரியவந்தது.

ஐந்து பேர் கும்பல்:

மேல் சோழங்குப்பம் கிராமத்திற்கு விரைந்த போலீசார், ஏழுமலை, 23, என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, கடந்த, 30ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 24, பிரேம் குமார், 22, மணிகண்டன், 23, ராஜாராம், 30, மற்றும் ஏழுமலை ஆகிய ஐந்து பேரும், அங்குள்ள ஏரிக்கரையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்துள்ளனர்.

 

‘தாய்மாமன் வேலை’:

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த, முருகன், தன் சகோதரியின், 4 வயது மகனை, அங்கு அழைத்து வந்துள்ளார். பின், முருகன், ஏழுமலை உள்ளிட்ட அனைவரும், பீர் குடித்துள்ளனர். குழந்தைக்கும், ஒரு பிளாஸ்டிக் டம்ளரில், பீரை ஊற்றி கொடுத்து, குடிக்க செய்ததுடன், சாப்பிட சிக்கன் வறுவலையும் கொடுத்துள்ளனர்.

பின், புகையிலையை தேய்த்து, சிறுவனே, வாய்க்குள் திணிக்கும் காட்சியும், வீடியோவில் வெளியானது. இவை அனைத்தையும், அங்கிருந்த, பிரேம்குமார், தன், மொபைல்போனில், வீடியோ எடுத்து, மணிகண்டன் மொபைல்போனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன், ‘வாட்ஸ் ஆப்’ மூலம் அனுப்பியுள்ளார்.

இதை மணிகண்டன், தன் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்ப, அப்படியே, நேற்று, மாநிலம் முழுவதும் பரவியது.

Tamil_News_large_1290460இதையடுத்து, வழக்கு பதிந்த கடலாடி போலீசார், ஏழுமலை, பிரேம்குமார் ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, குழந்தையின் தாய்மாமன் முருகன், மணிகண்டன், ராஜாராம் ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த கிராமத்திற்கு போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

டாஸ்மாக்கை திறந்து வைத்து இளைஞர்களை வாழ்க்கையை சீரழிக்கும் தமிழக அரசு, தற்போது குழந்தைகளையும் குடிக்க வைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது மக்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply