மாத்தறை பிரதான வீதியில் வெலிகம-குருபெபில்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

காரொருன்று , முச்சக்கர வண்டியை மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

ஒரு குழந்தை பிறந்து வெறும் 3 வாரங்கள் எனவும் , மற்றைய குழந்தையின் வயது 3 1/2 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நண்பகல் 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பல தகவல்களை அங்கிருந்தோர் வெளியிட்டிருந்தனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து காரை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளை அப்பிரதேசத்தில் அமைதியின்மை நிலவியது.

காரை ஓட்டி வந்தவர் இராணுவ வீரர் ஒருவர் எனவும், அவர் விபத்தின் பின்னர் காரின் இலக்கத்தகடை அகற்றி அங்கிருந்து தப்பித்தமை பல உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலதிக தகவல்களுக்கு காணொளியை பார்க்கவும்:

Share.
Leave A Reply