ஜிபிஎஸ் ட்ராக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட் கீ என்று ஏகப்பட்ட டெக்னாலஜிகள் வந்தாலும், கார் திருட்டை ஒழிக்க முடியவில்லை.

இதற்காக வித்தியாசமான ஒரு யுக்தியைக் கையாண்டு வருகிறது, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த க்ளைட் ரேப்ஸ் என்ற கார் கிராஃபிக்ஸ் கம்பெனி. ஸ்காட்லாந்தில் திருட்டு பயம் அதிகம்; அதிலும் கார் திருட்டுகள் சஜகம்.

new-old car01புதிதாக ஃபோக்ஸ் வாகன் டி5-ஸ்போர்ட்லைன் என்ற புதிய வேன் வாங்கிய கஸ்டமர் ஒருவர், ‘வேன் திருடு போகாதது மாதிரி ஏதாவது டெக்னாலஜி இருக்கா?’ என்று கிளாஸ்கோ நகரில் இருக்கும் க்ளைட் ரேப்ஸ் கம்பெனிக்கு வந்திருக்கிறார்.

‘ஒரு புது ஐடியா இருக்கு… ஓ.கேவா?’ என்று கஸ்டமரைக் கேட்க, மகிழ்ச்சியாக ஓ.கே சொல்லியிருக்கிறார் வேன் உரிமையாளர்.

new-old car02நீங்கள் நினைப்பதுபோல், பயங்கரமான டெக்னாலஜியெல்லாம் இதில் இல்லை. புதிய வேனை பழைய துருப்பிடித்த வேன் போன்று மாற்றி, கவர் செய்வதுதான் அது. காரைச் சுற்றி முழுவதுமான வினைல் மெட்டீரியலால் கவர் செய்து, அப்படியே அச்சு அசலாக பழைய இரும்புச் சாமான் கடையில் பேரீச்சம்பழத்துக்குப் பேரம் பேசக் கூடிய லெவலுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

‘‘இது ஒன்றும் போக்குவரத்துச் சட்ட விதிகளுக்குப் புறம்பானதல்ல. இதை நாங்கள் போலீஸாருக்கு மூன்று நாட்கள் விளக்கிய பிறகுதான் இந்த முயற்சியை மேற்கொண்டோம்.

new-old car03ஆனால், புது காரை பழசாக மாற்றுவதற்கு கார் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே இப்படிச் செய்து தருவோம். நிச்சயம் இது பலரையும் குழப்பத்திற்கு உள்ளாக்கும். யாரும் திருடவும் வாய்ப்பில்லை!’’ என்கிறது க்ளைட் ரேப்ஸ்.

ஆனால், இந்த விஷயம் திருடர்களுக்குத் தெரியாத வரைக்கும்தான் பாதுகாப்பு!

Share.
Leave A Reply