என்னமோ நடக்குது ஒன்றுமே புரியல்ல… மைத்திரி அணி மஹிந்த ராஜபக்சவை ஏமாற்ற நினைக்கிறதா? அல்லது மைத்திரி அணியும், மகிந்த அணியும் சேர்ந்து மக்களை ஏமாற்ற போகிறார்களா??

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ  குரு­ணாகல் மாவட்­டத்தில் போட்டியிடும் நோக்கில்­ ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணியின் வேட்­பாளர் பட்­டி­ய­லில் நேற்று கைச்சாத்திட்டுள்ளார்.

அதே­வேளை, மஹிந்த ஆத­ரவு கூட்­ட­ணி­யி­ன் பல முக்கியஸ்தர்களும் ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் கைச்சாத்திட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட அவ­ரது ஆத­ரவுக் கூட்­ட­ணி­யி­ன­ருக்கு எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யி­டு­வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமா இல்லையா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில் தற்போது இவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.

makinthadநேற்று மஹிந்த ராஜபக்ஷ தனது ஆத­ரவு அணி­யி­னரை சந்­தித்­தி­ருந்தார். இந்த சந்­திப்பின் பின்னரே அவர் வேட்பு­ம­னுவில் கைச்­சாத்­திட்­டதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதேபோல் மஹிந்த ஆத­ரவுக் கூட்­ட­ணியின் உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, பந்­துல குண­வர்­தன, வாசுதேவ நாண­யக்­கார, பிர­சன்ன ரண­துங்க, தினேஷ் குண­வர்த்­தன ,உதய கம்­மன்­பில, உள்­ளிட்ட பலரும் நேற்றைய தினம் வேட்­பு­ம­னுக்களில் கைச்­சா­திட்டுள்ளனர்.

அதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பலரும் நேற்­றைய தினம் அதி­கா­ர­பூர்­வ­மாக வேட்பு மனுவில் கைச்­சாத்­திட்­டனர்.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த  ராஜபக்ஷ ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் சார்பில் குரு­நாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜபக்ஷ அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­திலும் போட்­டி­யி­டு­வார்கள் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த கொழும்பில் போட்­டி­யி­ட­வுள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் இறுதி வேட்­பாளர் பட்­டியல் எதிர்­வரும் 13ஆம் திக்கி தாக்கல் செய்யப்பட­வுள்­ளது. இதன்­போதே கட்­சியின் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் யார் என்­பது தெரி­ய­வரும்.

இது தொடர்பில் நேற்று அப­ய­ராம விகா­ரையில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போது முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச இந்த தகவல்களை ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிடுகையில்;

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் முன்னா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார்.

கடந்த காலங்­களில் நாம் பல போராட்­டங்­களை மேற்­கொண்­டி­ருந்தோம். ஆனால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்மை கைவி­ட­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்­து­வதில் கட்­சிக்கு உள்ளும் கட்­சிக்கு வெளி­யிலும் சதித் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டது உண்­மையாகும்.

ஆனால் தலை­மைத்­துவ சிக்கல் ஒன்று ஏற்­ப­ட­வில்லை. கடந்த காலங்­களில் ஊட­கங்­களில் பல முரண்­பாட்டுக் கருத்­துக்கள் வெளி­வந்த.

ஆனால் அவை அனைத்­துக்கும் இன்று முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷ குரு­நாகல் மாவட்­டத்தில் போட்டியிடுகின்றார்.

அதேபோல் மஹிந்த அத­ரவு அணி­யினர் அனை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்டியி­டு­வது உறு­தி­யாகி விட்­டது.

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பலமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் களமிறங்கும்.

அதேபோல் யாரை கட்சியின் இணைத்துக் கொண்டுள்ளனர், யார் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்ற பல விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிவருகிறது.

இந்த விடயம் தொடர்பில் எம்மால் எதையும் இப்போதைக்கு குறிப்பிட முடியாது. எதிர்வரும் 13ஆம் திகதி இறுதியான வேட்புமனு பட்டியல் தாக்கல் செய்யப்படும்.

அப்போது அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.

கைச்சாத்திட்டாலும் மாற்றம் ஏற்படலாம் இறுதி நேரத்தில் எதுவும் நடக்கலாம்: ஜனாதிபதி நெருக்கடியில் என்கிறார் ராஜித

rajithaa

ராஜித சேனா­ரட்ன

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்பு மனுக்கள் தொடர்பில் இது­வரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வேட்பு மனுக்­களை தொடர்ந்து தயா­ரித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

மஹிந்த ராஜ­பக் ஷ வேட்பு மனுவில் கைச்­சாத்­ திட்­டுள்­ள­தாகக் கூறப்­பட்­டாலும் அதிலும் மாற் றம் ஏற்­ப­டலாம். இறுதி நேரத்தில் எதுவும் நடக்­கலாம் என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு வேட்பு மனு வழங்கும் விட­யத்தில் ஜனா­தி­பதி நெருக்­க­டி­யி­லேயே உள் ளார்.

மஹிந்­த­வுக்கு வேட்பு மனு வழங்­க­வேண்டும் என்று ஒரு தரப்பும் வழங்­கக்­கூ­டாது என்று மற்­று­மொரு தரப்பும் கூறு­வ­தா­லேயே இந்த நெருக்­கடி நில­வு­கின்­றது.

ஜனா­தி­பதி இரண்டு தரப்­புக்­க­ளு­டனும் பேச்சு நடத்­தி­வ­ரு­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எனது அர­சியல் வர­லாற்றில் இது­போன்ற குழப்­ப­மான தேர்தல் நிலையை நான் கண்­ட­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்­ச­ரவை பேச்­சாளர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து விலகிச் சென்று மீண்டும் இணைந்­து­கொண்ட தரப்­பினர் தேர்தல் வேட்பு மனு விவ­காரம் தொடர்பில் வேலைத்­திட்டம் ஒன்றை தயா­ரித்து ஜனா­தி­ப­திக்கு கொடுத்துள்ளோம்.

இதில் பல விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அதா­வது ஊழல் மற்றும் போதைப் பொருள் குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­வர்­க­ளுக்கு வேட்பு மனுக்­களை வழங்­கக்­கூ­டாது என்று இதில் முக்­கி­ய­மாக கோரி­யுள்ளோம்.

கேள்வி: உங்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா?

பதில்:  நீதி கிடைக்கும் என்று நம்­பு­கின்றோம்.

கேள்வி:  நீதி கிடைக்­கா­விடின் ?

பதில்:  அதனை அப்­போது பார்ப்போம்.

கேள்வி: அந்தக் கோரிக்­கையில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு வேட்பு மனு வழங்­கு­வது குறித்து என்ன குறிப்பிட்டுள்­ளீர்கள்?

பதில்: அது தொடர்­பான தீர்­மானம் எடுக்கும் உரி­மையை ஜனா­தி­ப­திக்கு வழங்­கி­யுள்ளோம். அது குறித்து நாங்கள் எத­னையும் குறிப்­பி­ட­வில்லை.

கேள்வி:  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் மஹிந்த ராஜ­பக்ஷ வேட்பு மனுவில் கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்பு மனுக்கள் இது­வரை இறுதி செய்­யப்­ப­ட­வில்லை. வேட்பு மனுக்­களை தொடர்ந்து தயா­ரித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

மஹிந்த ராஜ­பக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்­ள­தாகக் கூறப்­பட்­டாலும் அதிலும் மாற்றம் ஏற்­ப­டலாம். இறுதி நேரத்தில் எதுவும் நடக்­கலாம்.

கேள்வி:  இருந்­தாலும் தற்­போது மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு வேட்பு மனு கிடைக்கும் என்ற நிலை தோன்றியுள்ளதே?

பதில்:  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி என்­பது கூட்டுக் கட்­சி­களைக் கொண்­டது. இந்­நி­லையில் பல கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை பரி­சீ­லித்து ஜனா­தி­பதி இறுதி முடிவு எடுப்பார்.

கேள்வி:  மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு வேட்பு மனு கொடுப்­பது தொடர்பில் உங்கள் நி்லைப்­பாடு என்ன?

பதில்:  அதனை நான் தெளி­வாக கூறியுள் ளேன்.

கேள்வி:  மஹிந்த ராஜ­ப­க்ஷவை வேட்­பா­ள­ராக நிய­மிக்­கு­மாறு அழுத்­தங்கள் வந்­ததா?

பதில் அழுத்­தங்கள் வந்­தன. அவர்கள் கூட்­டங்­களை நடத்­தினர். மக்­களை பஸ்­களில் வர­வ­ழைத்­தனர். இந்­த­வ­கையில் அழுத்­தங்கள் வந்­தன.

கேள்வி:  கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­க­ளித்த சிறு­பான்மை கட்­சிகள் சுதந்­திரக் கட்­சியின் மாற்றுத் தரப்­பினர் ஆகி­யோரின் நிலை என்­னா­வது?

பதில்:  அந்த அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் ஜனா­தி­பதி பேச்சு நடத்­து­கின்றார்.

கேள்வி:  சிவில் அமைப்­புக்கள் கேள்வி எழுப்­புமா?

பதில்:  சிவில் அமைப்­புக்­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்சு நடத்­தினார். அதா­வது ஜன­வரி எட்டாம் திகதி மக்கள் வழங்­கிய ஆணைக்கு புறம்­பாக எத­னையும் செய்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்று ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார்.

கேள்வி:  நீங்கள் என்ன கூறி­னாலும் வேட்பு மனுவில் மஹிந்த கையொப்பம் இட்­டு­விட்­டாரே?

பதில்:  கையொப்பம் இட்­டு­விட்டால் இறுதி முடிவு என்று அர்த்தம் இல்லை. ஜனா­தி­பதி அதனை அங்­கீ­க­ரிக்­க­வேண்டும். எனவே நிலை­மைகள் மாறலாம். எவ்­வா­றெ­னினும் 13 ஆம் திக­திக்குள் முடிவு எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

கேள்வி:  வேட்பு மனு தொடர்பில் இறுதி முடிவு எடுப்­பது ஜனா­தி­ப­தியா? அல்­லது வேட்பு மனு சபையா?

பதில்:  ஜனா­தி­ப­தியே இறுதி முடிவு எடுப்பார்.

கேள்வி: குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­வர்­க­ளுக்கு ?

பதில்:  குற்­றச்­சாட்டு உள்­ள­வர்­க­ளுக்கு வேட்பு மனு வழங்­கக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் நாங்கள் இருக்­கின்றோம். ஆனால் இது அர­சியல் என்­ப­தனை நாம் மறக்­கக்­கூ­டாது. ஆனால் சில­ருக்கு வேட்பு மனு வழங்­காமல் இருக்க ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இணங்­கி­யுள்­ளது.

கேள்வி:  அவர்­க­ளுக்கு வேட்பு மனு கொடுத்தால் என்ன செய்­வீர்கள்?

பதில்:  அப்­போது பார்ப்போம். எமது மக்கள் என்ன கூறு­கின்­றார்­களோ அதனை செய்வோம். வெளி­யே­று­மாறு மக்கள் கூறினால் வெளி­யே­றுவோம்.

கேள்வி:  நாட்டில் மாற்றம் ஏற்­பட்டு சிறிது காலம் தானே கடந்­துள்­ளது?

பதில்:  ஆம். அந்த சிறிது காலத்தில் நாங்கள் பல சாத­னை­களை செய்­துள்ளோம். ஆனால் சில­வற்றை செய்ய முடி­ய­வில்லை. அடுத்த அர­சாங்­கத்தில் அதனை செய்வோம். குறிப்­பாக 20 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்ற முடி­யா­மை­யை­யிட்டு கவ­லை­ய­டை­கின்றோம்.

கேள்வி:  ஜனா­தி­பதி எத­னைப்­பற்றி சிந்­திக்­கின்றார்?

பதில்:  மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­னதன் பின்னர் எதிர்­பா­ரா­த­வி­த­மாக கட்­சியின் தலைமைப் பதவி கிடைத்­தது. எனவே கட்­சியை பிள­வு­ப­டாமல் அவர் பாது­காக்­க­வேண்டும். அவர் இந்தக் கட்­சியில் 47 வரு­டங்­க­ளாக இருக்­கின்றார். எனவே கட்­சியை காப்­பாற்­ற­வேண்டும். அவ்­வா­றான நிலை­மையும் உள்­ளது.

கேள்வி கட்­சியை காப்­பாற்ற சென்று 62 இலட்சம் வாக்­கா­ளர்­களை காட்­டிக்­கொ­டுப்­பது எவ்­வாறு சரி­யாகும்?

பதில்: அதில் ஒரு பிரச்­சினை உள்­ளது. இது­போன்ற பிரச்­சினை ஒன்று வரலாம். பொறுத்­தி­ருந்து பார்ப்போம். இன்னும் இறுதி முடிவு வர­வில்லை.

கேள்வி மஹிந்த ராஜ­பக்ஷ வெற்­றி­பெற்று பிர­த­ம­ராகி ஜனா­தி­ப­திக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்தால்?

பதில்:  அவ்­வாறு கொண்டு வந்தால் பார்ப் போம்.

கேள்வி மஹிந்­த­வுக்கு பிர­தமர் வேட்­பாளர் வழங்­கப்­ப­டாதா?

பதில்:  நிச்­ச­ய­மாக வழங்­கப்­ப­டாது.

கேள்வி:  ஜனா­தி­பதி ஏன் இறுதி முடிவு எடுக்க தயங்­கு­கின்றார்?

பதில்:  அவர் ஜன­நா­யக ரீதி­யாக செயற்­ப­டு­கின்றார்.

கேள்வி:  ஜனா­தி­பதி நிலை­யான தலை­வ­ராக இல்லை என்று கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:  ஜன­நா­யக ரீதியில் செயற்­பட்டால் அவ்­வாறு கூறு­வார்கள். பண்­டா­ர­நா­யக்­கவை விமர்­சித்­த­வர்­களே இந்த நாட்டில் உள்­ளனர். பிரே­ம­தாச மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் ஜே.ஆர். ஜய­வர்த்­த­னவின் கீழ் செயற்­பட்­ட­வர்கள் அவ்­வா­றுதான் கூறு­வார்கள்.

கேள்வி:  மஹிந்­த­வுக்கு வேட்பு மனு வழங்­கப்­ப­டுமா? இல்­லையா?

பதில்:  இறுதி முடிவு ஜனா­தி­ப­தி­யினால் எடுக்­கப்­படும்.

கேள்வி:  நீஙகள் விரக்­தியில் உள்­ளீர்­களா?

பதில் இல்லை என்று கூற முடி­யாது.

கேள்வி:  இந்த விவ­கா­ரத்தில் ஜனா­தி­பதி நெருக்­க­டி­யுடன் உள்­ளாரா?

பதில்: மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு வேட்பு மனு வழங்கும் விட­யத்தில் ஜனா­தி­பதி சிறி­சேன நெருக்­க­டி­யி­லேயே உள்ளார்.

மஹிந்­த­வுக்கு வேட்பு மனு வழங்­க­வேண்டும் என்று ஒரு தரப்பும் வழங்­கக்­கூ­டாது என்று மற்­று­மொரு தரப்பும் கூறு­வ­தா­லேயே இந்த நெருக்­கடி நில­வு­கின்­றது. ஜனா­தி­பதி இரண்டு தரப்­புக்­க­ளு­டனும் பேச்சு நடத்­தி­வ­ருகின்றார். எனவே நெருக்­க­டி­யி­லேயே உள்ளார்.

கேள்வி:  மஹிந்­த­வுக்கு வேட்பு மனுவை வழங்­கு­வதை நீங்கள் எதிர்க்­கின்­றீர்­களா?

பதில்:  மஹிந்த ராஜபக்ஷ என்ற மனிதருடன் எனக்கு பிரச்சினை இல்லை. அவர் எனது நண்பர். பஷில் ராஜபக்ஷ சில தினங்களுக்கு முன்னர் என்னுடன் பேச்சு நடத்தினார். ஆனால் கொள்கை விடயத்தில் பிரச்சினை உள்ளது.

கேள்வி:  விமல் வீரவங்சவும் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளாரே?

பதில்:  அதுவொரு பெரிய விடயமல்ல.

கேள்வி:  குழப்பமான நிலையாக தெரிகின்றதா?

பதில்:  எனது அரசியல் வரலாற்றில் இதுபோன்ற குழப்பமான தேர்தல் நிலையை நான் கண்டதில்லை.

கேள்வி:  மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது?

பதில்:  அவருக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பாதுகாப்பு கோரினால் வழங்கப்படும்.

கேள்வி: அவர் எம்.பி. யாகிவிட்டால்?

பதில்:  எம்.பி. க்குரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

.

Share.
Leave A Reply