நாய்கள் கண்டகண்ட இடங்களில் எல்லாம் மல, ஜலம் கழிப்பதைபோல் அல்லாமல், பூனைகள் மிகவும் இரகசியமாக இந்த இயற்கை உபாதைகளை கழித்து வருவது நாம் அனைவரும் நன்கறிந்த விஷயமாக உள்ளது.

ஆனால், இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்ற ஒரு வளர்ப்பு பூனை, வீட்டின் கழிப்பறையில் உள்ள பீங்கானில் மட்டும் மல, ஜலம் கழித்துவரும் தகவல் வீடியோவாக வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மெரினா பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் உள்ள கழிப்பறை ‘கிளாஸெட்’டில் யாரோ சிலர் ‘டூ பாத்ரூம்’ போய்விட்டு, தண்னீரை திறந்து விடாமல் சென்று விடுவதை அடிக்கடி பார்த்து கடுப்பாகிப் போனார்.

இதுதொடர்பாக, வீட்டில் உள்ள குடும்ப நபர்களை கேட்டபோது, ‘நான் இல்லை.., நீ இல்லை’ என கூறி அவர்கள் பழியில் இருந்து தப்பித்து கொண்டனர்.

தொடர்ந்து இதேபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் அந்த ´உள்வீட்டு திருடனை’ பொறிவைத்து பிடிக்க எண்ணிய வீட்டு உரிமையாளர், கழிப்பறைக்குள் யாருக்கும் தெரியாமல் ஒரு இரகசிய கேமராவை பொருத்தினார்.

சில நாட்களுக்கு பின்னர், அந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை எல்லாம் போட்டுப் பார்த்த அவர் ஆச்சரியத்தால் திகைத்துப் போனார்.

தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்துக்கு கழிப்பறைக்குள் நுழைந்த அவரது வளர்ப்பு பூனை, கிளாஸெட் மீது ஏறி, காலைக் கடனை முடித்துவிட்டு செல்லும் அபூர்வ காட்சி அதில் பதிவாகியிருந்தது.

பாவம், இவ்வளவு புத்திசாலியான அந்தப் பூனைக்கு ‘பிளஷ் அவுட்’டில் இருந்து தண்னீரை திறந்து, தனது அசுத்தத்தை கிளாஸெட்டில் இருந்து வெளியேற்றும் வழி தெரியவில்லையோ.., இல்லை, மனிதர்களைப் போன்ற கை அமைப்பு அதற்கு இல்லாததால் இயலவில்லையோ.., என்று எண்ணியும், தனது செல்லப்பூனையை நினைத்து பூரித்தும் போன அந்த வீட்டுக்காரர், அந்த ‘கியூட் வீடியோவை’ இணைதளத்தில் பதிவும் செய்து, மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply