சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றிரவு 8 மணியளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா அறிவித்திருந்தார்.

இதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தடைவிதித்திருந்தார்.

அதையும் மீறி கூட்டம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிரசன்ன சோலங்காராச்சி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த கூட்டத்தை நடத்த தடை கோரினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரின் அனுமதியின்றி செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டக் கூடாது என்று சட்டத்தரணிகள் மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கட்சித் தலைவரின் அனுமதியின்றி, மத்திய செயற்குழுக் கூட்டத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் நாள் வரை கூட்டக்கூடாது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியைக் கைப்பற்றும் மகிந்த ராஜபக்சவின் திட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியைக் கைப்பற்றும் மகிந்த ராஜபக்சவின் திட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply