எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் நான் நடு நிலை­யா­கவே செயற்­ப­டுவேன். எனக்கு எந்த கட்­சி வெற்றி பெறு­வது என்­பது முக்­கி­ய­மல்ல. ஜன­வரி 8 ஆம் திகதி பெற்ற வெற்­றியை பாது­காக்கும் வகை­யி­லான அர­சாங்கம் ஒன்றே எனக்கு அவ­சி­ய­மாகும்.

மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் ஜன­வரி 8 ஆம் திக­திக்கு முன்னர் இருந்த வைராக்­கியம் இன்னும் உள்­ளது. தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெற்­றாலும், பிர­தமர் பதவி என்று வரும்­போது மஹிந்த ராஜபக்ஷவை­விட சிரேஷ்டமான­வர்கள் பலர் கட்­சியில் இருக்­கி­றார்கள்.

எனினும் வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த லில் மஹிந்த ராஜ­பக்ஷ வெற்­றி­பெற மாட்டார். அவர் தொடர்ந்து தோல்வி­களைச் சந்­திப்பார் . அவர் தோல்­வி­ய­டைந்தே சரித்­திரம்.

நான் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆத­ர­வாளர் இல்லை. முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்­த்தன கொண்டுவந்த அர­சியல் சாச­னத்தின் அடிப்­ப­டையில் நடை­பெறும் தேர்­தல்­முறை கார­ண­மா­கவே அவ­ருக்கு தேர்­தலில் போட்­டி­யிட வாய்ப்பு வழங்­க­வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது.

அவ­ருக்கு வேட்பு மனு வழங்­கி­யதில் எனக்கு உடன்­பாடு இல்லை என ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன நேற்று அறி­வித்தார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று மாலை இடம்­பெற்ற தற்­போ­தைய அர­சியல் சூழ்நிலை தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் விஷேட ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த நவம்பர் மாதத்தின் பின்னர் ..

கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திக­திக்கு பின்னர் இப்­படி ஒரு ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் உங்களனைவரையும் சந்­திப்­பது இதுவே முதல் தடவை என நினைக்­கின்றேன்.

உங்­க­ள­னை­வ­ரையும் மீண்டும் ஒரு முறை சந்­திக்க கிடைத்­தமை தொடர்பில் மகிழ்ச்சி. அத்­துடன் உங்கள் அனை­வ­ரையும் நான் வர­வேற்­கின்றேன்.

விஷே­ட­மாக தற்­போ­தைய அர­சியல் சூழ் நிலை தொடர்­பி­லேயே சில தெளிவு படுத்­தல்­களை நான் செய்ய எதிர்பார்க்­கின்றேன்.

42 நாட்­களில் ஜன­நா­யக புரட்சி

நான் கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட முன்னர் அல்­லது ஜன­நாயக புரட்சியை ஏற்­ப­டுத்த எடுத்­துக்­கொண்ட காலம் வெறும் 42 நாட்கள் மட்­டுமே.

அது தொடர்பில் நான் முன் வைத்த கார­ணிகள் தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம், ஜன­நா­யகம், மனித உரிமை, சுதந்­திர ஊடகம் மற்றும் நல்­லாட்சி உள்­ளிட்ட விட­யங்­களை மையப்படுத்­திய எமது திட்­டங்­க­ளுக்கு மக்கள் அங்­கீ­காரம் அளித்­த­தனா­லேயே புதிய அத்­தி­யா­யத்தை ஏற்படுத்த முடிந்­தது. அவ்­வாறு நான் முன் வைத்த விட­யங்­களே என்னை ஜனா­தி­ப­தி­யாக ஆக்­கி­யது.

49 வருட கால அர­சியல் வர­லாற்றைக் கொண்ட நான் எம்.பி.யாக, பிர­தி­ய­மைச்­ச­ராக அமைச்­ச­ராக பல பதவிகளை வகித்­துள்ளேன்.

இந் நிலையில் நான் தவ­றா­னவன் அல்ல என்பது தொடர்­பிலும் அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்யக் கூடியவன் அல்ல என்­பது தொடர்­பிலும் இந் நாட்டு மக்­க­ளுக்கு மிகப் பெரிய ஒரு நம்­பிக்கை இருந்­தது.

அந்த நம்­பிக்­கையும் எதிர்­பார்ப்­புமே பொது அபேட்­ச­க­ராக என்னை மாற்­றி­யது. நான் பொது அபேட்­ச­க­ராக அறிவிக்­கப்­பட   முன்னர் ரணில் விக்­கிரம சிங்­கவை ஒரு முறை கூட சந்­திக்­க­வில்லை.

சந்­தி­ரி­காவை ஒரே ஒரு தடவை மட்­டுமே சந்­தித்தேன். எனது வெற்றி தொடர்பில் 49 அர­சியல் மற்றும் பிற குழுக்கள் பாடு­பட்­டன. ஒத்­து­ழைத்­தன. அவற்றில் பெரும்­பா­லா­ன­வற்றை நான் தனிப்­பட்ட ரீதியில் அறிந்திருக்க­வில்லை.

ஐக்­கிய தேசிய கட்சி, சரத் பொன்­சே­காவின் ஜன­நா­யக கட்சி, முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் விடு­தலை முன்னணி உள்­ளிட்ட கட்­சிகள் எனக்கு ஆத­ர­வ­ளித்­தன.

1526397_937237709640187_3764417262398221623_nஇரு ஒப்­பந்­தங்கள் இருந்­தன…

உண்­மையில் எனக்கு இரண்டு ஒப்­பந்­தங்கள் இருந்­தன. அதில் ஒன்று 49 குழுக்­களும் எனக்கு ஆத­ரவு தெரிவித்து கைச்­சாத்­திட்ட ஒப்­பந்தம். மற்­றை­யது ரணிலை பிர­த­ம­ராக்­கு­வது என்­ப­தாகும்.

அதன்­ப­டியே நான் ஜனா­தி­ப­தி­யான அடுத்த நிமிடம் ஒப்­பந்­தப்­படி பிர­த­ம­ராக ரணிலை நிய­மித்தேன்.

47 பேரின் தலை­வரை பிர­த­ம­ராக்­கி­யது எப்­படி?

அந்த ஒப்­பந்­தத்தின் பிர­கா­ரமே 225 பேர் கொண்ட பாரா­ளு­மன்­றத்தில் நான் 47 பேரின் ஆத­ரவு கொண்ட ரணிலை பிர­த­ம­ராக்­கினேன்.

இன்­றுள்ள அர­சியல் சூழ் நிலை­களை வைத்து நான் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியை ஏற்­றது தவ­றா­னது என எனக்கு நெருங்­கிய பலரும் விமர்­சிக்­கின்­றனர்.

உண்­மையில் எனது எதிர்­பார்ப்பு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி பத­வி­யேற்­றதும் 10 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்தல் ஒன்­றுக்கு செல்­வ­தாகும்.

எனினும் ரணிலை பிர­த­ம­ராக்கல், 49 குழுக்­க­ளுடன் செய்த ஒப்­பந்தம் பிர­காரம் உடன்­பாடு காணப்­பட்ட 100 நாள் திட்­டத்தை நிறை­வேற்ற வேண்­டிய தேவை எனக்கு இருந்­தது.

19 ஆவது அர­சியல் திருத்தம், நிறை­வேற்று அதி­காரம் மிக்க ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தல், தகவல் அறியும் உரிமை உள்­ளிட்ட பல­வற்றை அர­சியல் யாப்பில் திருத்­தத்தைச் செய்து கொண்­டு­வரக் கூடிய தேவை இருந்­தது.

நான் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை பத­வியை ஏற்­றது தவ­றா­னது எனக் கூறுவோர், இந்த 100 நாட்­களில் 47 பேரின் ஆத­ரவு மட்­டுமே கொண்ட ஒரு­வரை பிர­த­ம­ராக்கி அத­னூ­டாக 100 நாள் திட்­டங்­களை நிறை­வேற்­றி­யது எப்­படி என சிந்­திக்க வேண்டும்.

Maithriசுதந்­திரக் கட்­சியின் தலை­மையை ஏற்­ற­தா­லேயே 100 நாள் வெற்­றி­ய­ளித்­தது

நான் அதி­கா­ரத்தை நாட்­டுக்­காக குறைக்க தயா­ரா­னவன். சுதந்­திர கட்­சியின் தலைமை பத­வியை நான் பலாத்கார­மாக கைப்­பற்­ற­வில்லை.

எனக்கு அதனை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு அழைப்பு வந்­தது. அதனை நான் ஏற்­றுக்­கொண்­ட­தா­லேயே 100 நாள் திட்டம் வெற்­றி­ய­ளித்­தது.

இன்று விலைக்­கு­றைப்பு, 19 ஆவது திருத்தம், மக்கள் நிவா­ர­ணங்கள் குறித்து பெரு­மை­யாக பேசு­கின்­றனர். அவை கிடைக்க நான் சுதந்­திர கட்­சியின் தலைமைப் பொறுப்பை ஏற்­ற­மையே பிர­தான கார­ண­மாகும்.

Mahinda_CIமஹிந்த தலை­வ­ராக இருந்திருந்தால் 19 நிறை­வே­றி­யி­ருக்­காது

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சிக்கு நான் தலை­வ­ராக இல்­லாது மஹிந்த ராஜ­பக் ஷ தலை­வ­ராக இருந்­தி­ருந்தால் பெரும்­பான்மை இல்­லாத பாரா­ளு­மன்­றத்தில் 19 ஆவது திருத்தம் நிறை­வே­றி­யி­ருக்­காது. மக்­க­ளுக்கு நிவா­ரணம் அளித்த ரவி கரு­ணா­நா­யக்­கவின் வரவு செலவுத் திட்டம் நிறை­வே­றி­யி­ருக்­காது.

எனவே இந்த நூறு நாள் திட்டம் நிறை­வே­றி­யதன் பெருமை பாரா­ளு­மன்றில் அது தொடர்பில் கையு­யர்த்­திய ஒவ்­வொ­ரு­வ­ரையும் சாரும்.

காட்­டிக்­கொ­டுத்­தவன், கெட்­டவன், துரோகி என்­கின்­றனர்

கடந்த இரு வாரங்­க­ளாக என்னைப் போன்று விமர்­சிக்­கப்­ப­டு­ப­வர்கள் வேறு யாரும் இருக்க முடி­யாது. கெட்டவன், காட்­டிக்­கொ­டுத்­தவன், துரோகி என என்னை வர்­ணிக்­கின்­றார்கள்.

இவை 1978 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவொரு ஜனா­தி­ப­தியும் கேட்­டிரா­தவை. ஜன­நா­ய­கத்தை நிலை நிறுத்த பாடு­படும் அதி­கா­ரத்தை குறைத்த நான் இவ்­வா­றான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ளேன்.

எனினும் நான் ஏற்­ப­டுத்­திய ஜன­நா­யகம், சுதந்­தி­ரத்தை அனை­வரும் பயன்­ப­டுத்­து­கின்­றனர் என்­பதை அறியும் போது சந்­தோ­ச­மாக உள்­ளது. விமர்­ச­னங்­களை நாம் ஏற்­றுக்­கொள்­ப­வர்கள். அதுவே ஒரு­வரை மேலும் உயர்­வ­டையச் செய்யும்.

மஹிந்­தவை இப்­படி விமர்­சித்­தி­ருந்தால்…

இப்­போது என்னை விமர்­சிப்­பது போன்று கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திக­திக்கு முன்னர் மஹிந்த ராஜ­ப­க் ஷவை விமர்­சித்­தி­ருந்தால் அல்­லது இதில் நூற்றில் ஒரு பங்­காக அவரை விமர்­சித்­தி­ருந்தால் என்ன நடந்திருக்கும் என்­பது உங்கள் அனை­வ­ருக்கும் தெரியும். எனினும் இப்­போது அப்­ப­டி­யான சூழல் கிடை­யாது. ஜன­நா­ய­கத்தை ஒவ்­வொ­ரு­வரும் அனுப­விக்க முடி­யு­மாக உள்­ளது.

6 மாதத்தில் சிறந்த மாற்றம்

கடந்த ஆறு மாதங்­களில் நாட்டில் இரத்தம் எங்கும் கொட்­டப்­ப­ட­வில்லை. கொலைகள் இல்லை. எனவே சிறந்த மாற்றம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. 19 உள்­ளிட்ட பல தேவை­யான திருத்­தங்கள் செய்­யப்­பட்­டன. அதனை 47 பேரின் ஆத­ரவு கொண்ட அர­சாங்கம் ஒன்­றினால் செய்ய முடி­யுமா?

சுதந்­திர கட்­சிக்குள் குழப்பம்

இப்­படி பெரும்­பான்­மை­யற்ற அர­சாங்­கத்தை வைத்து நான் அர­சாங்­கத்தை முன்­னோக்கி எடுத்துச் செல்லும் போது தான் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சிக்­குள்ளும் கூட்­ட­மைப்­புக்­குள்ளும் பிளவு ஏற்­பட்­டது.

தலைமை பத­வியை கைய­ளித்து காலை­வா­ரி­விட்­டனர்

தலைமை பத­வியை எனக்கு அளித்த கட்சி, எனது காலை வாரி­விட்­டது. நல்­ல­வர்­களை உள்­ள­டக்­கிய கட்சியொன்றை கட்­டி­யெ­ழுப்ப நான் படாத பாடு பட­வேண்­டி­யி­ருந்­தது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு தலை­வர்கள் நாட­ளா­விய ரீதியில் சென்று எனக்­கெ­தி­ராக மேடையமைத்தனர்.

ஒரு கூட்­டத்­துக்கு 20 பேர் என்­றனர். பின்னர் 40 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளுடன் என்­றனர். பின்னர் 55 பேர் என்­றனர். இப்­படி இவர்கள் ரணி­லுக்கு எதி­ராக சவால் விட­வில்லை. எனக்கு எதி­ரா­கவே மேடை ஏறி சவால் விட்­டனர்.

ஒழுக்­காற்று நடவ­டிக்கை ஏன் எடுக்­க­வில்லை?

இவ்­வாறு மேடை மேடை­யாக ஏறி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக ஏன் ஒழுக்­காற்று நடவ­டிக்கை எடுக்­க­வில்லை என பலர் கேட்­கின்­றனர். எப்­படி அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நடவ­டிக்கை எடுப்­பது. 47 பேரின் ஆத­ரவு மட்­டுமே கொண்ட பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்ல வேண்டும் அல்­லவா?

இத­னா­லேயே கட்­சியின் தீர்­மா­னங்­க­ளுக்கு அப்பால் சென்று நடவ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்கள் தொடர்பில் கண்டும் காணாமல் இருக்கும் வித­மான போக்­கொன்றை நான் கடைப் பிடிக்­க­வேண்­டி­யி­ருந்­தது. அப்­படி இருத்திருக்­கா­விட்டால் இந்த 100 நாள் திட்­டத்தை நிறை­வேற்­றி­யி­ருக்க முடி­யாது.

மூன்று குற்றச்சாட்­டுக்கள்

இப்­போது நாம் தேர்தல் ஒன்றை எதிர்­நோக்­கி­யுள்ளோம். அடுத்த 5 வரு­டங்­க­ளுக்கான எ­மது எதிர்­கா­லத்தை தீர்மா­னிக்கும் தேர்தல் அது. இந்த சந்­தர்ப்­பத்தில் எனக்கு எதி­ராக 3 குற்றச் சாட்­டுக்கள் விமர்­ச­கர்­களால் சுமத்­தப்­ப­டு­கின்­றன.

ஒன்று கட்­சியின் தலைமை பத­வியை ஏற்­றமை. அடுத்­தது மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­தித்­தமை, மற்­றது மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு வேட்­பாளர் பட்­டி­யலில் இடம்­கொ­டுத்­தமை.

70446a28e69e191c1aab3cb6c14a-grandeமஹிந்­தவின் பிர­தமர் பத­விக்­கான போராட்டம்

முதலில் நான் மஹிந்­தவை சமல் ராஜ­ப­க்ஷவின் இல்­லத்தில் வைத்து சந்­தித்தேன். பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஜனா­தி­ப­தியின் காரி­யா­ல­யத்தில் வைத்து சந்­தித்தேன்.

இதன்போது மஹிந்த தரப்­பினர் பல்­வேறு கோரிக்­கை­களை முன்வைத்­தனர். ஒன்று தேர்­தலின் பின்னர் மஹிந்தவை பிரதம ராக்குவது. மற்றது பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது. மற்றையது பல பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளிப்படுத்துவது போன்றன அவர்களது கோரிக்கைகளாக இருந்தன.

எனினும் நான் உடனடியாகவே அந்த கோரிக்கைகளை மறுத்தேன்.

மஹிந்தவை பிரதமராக்க மறுத்தமைக்கான காரணங்கள்

நான் அவ்வாறு மறுத்தமைக்காக அவர்கள் காரணம் கோரினர். நான் அதனையும் அவர்களுக்கு விளக்கினேன். மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் ஜனவரி 8 ஆம் திகதி நல்லாட்சிக்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம்கள் எம்மை அங்கீகரிக்க மாட்டார்கள்.

துஷ்பிரயோகம் அற்ற நல்லாட்சிக்கான அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கான தகுதி மஹிந்தவுக்கு இல்லை என்று கூறினேன். அவர் தேர்தலில் களம் இறங்கினால் இளைஞர்களின் வாக்குகளும் எமக்கு இல்லாமல் போகும் என்பதையும் விளக்கிவிட்டு நான் அங்கிருந்து வெளியேறியிருந்தேன்.

அதனால் கட்சியை தோற்கடிக்காதீர்கள் என நான் அப்போது மஹிந்த முன்னிலையிலேயே கூறிவிட்டே சென்றேன்.

19 ஆவது அர­சியல் திருத்­தத்தைக் கொண்­டு­வர வேண்­டிய தேவை எனக்கும், ஐ.தே.க.வுக்கும், ஜே.வி.பி.க்கும் மு.கா.வுக்கும் இருந்­த­துடன் எமக்கு வர­ம­ளிக்க ஆத­ரவு தந்த 49 அர­சியல் கட்­சிகள் மற்றும் குழுக்­க­ளுக்கும் இருந்­தன.

19 ஐ நிறை­வேற்ற முற்­பட்ட போது முதலில் 20 ஐ நிறை­வேற்ற வேண்டும் எனவும் அது தொடர்­பிலும் 100 நாள் திட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்டி சுதந்­திர கட்சிக் காரர்கள் என்­னிடம் வாதா­டினர்.

பின்னர் 19 ஐயும் 20 ஐயும் ஒரே நேரத்தில் கொண்­டு­வர வேண்டும் என்­றனர். 19 ஐ ஆத­ரித்து கைதூக்க 20 ஐ கொண்­டு­வ­ரு­மாறு கோரினர். இதனை ரணில் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு நான் சொல்லி அது தொடர்பில் ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்தோம்.

இந் நிலையில் சு.க.வின் தலைவன் என்ற வகையில் கட்­சி­யி­னரை சமா­தா­னப்­ப­டுத்தும் நி­லை­மை­களை விளக்கி முதலில் 19 ஐ கொண்­டு­வந்து 215 பேரின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றினோம். எனினும் பின்னர் 20 ஐ கொண்­டு­வர முடி­யாமல் போனது துர­திஷ்­ட­வ­ச­மா­னது.

மத்­திய வங்­கியின் ஆளுநர் விவ­காரம்

இப்­படி போகும் போது தான் மத்­திய வங்­கியின் ஆளுநர் விவ­காரம் பூதா­க­ர­மா­னது. அது தொடர்­பி­லான பிரச்­சி­னையை விசா­ரிக்க பாரா­ளு­மன்றில் குழு­வொன்றும் அமைக்­கப்­பட்­டது.

ரணில் நல்­லவர்

ரணில் தொடர்பில் எனக்­குள்ள நல்­லெண்ணம் போன்றே மக்கள் மத்­தி­யிலும் அவர் நல்­லவர் என்ற நிலைப்­பாடு இருந்­ததை நான் அறிந்தேன்.

ஆளு­நரை ராஜி­னாமா செய்யச் சொல்­லு­மாறு ஆலோ­சனை

இந் நிலையில் மத்­திய வங்கி ஆளுநர் பிரச்­சினை பூதா­க­ர­மாக மாறி­யதைத் தொடர்ந்து அதற்­கான சிறந்த வழி. ஆளு­நரை இரா­ஜி­னாமா செய்ய வைப்­பதே என தோன்­றி­யது. அது தொடர்பில் நான் ரணி­லிடம் கூறினேன். உமக்­குள்ள (ரணி­லுக்கு) நல்­லெண்­னத்தை சிதைத்து விட வேண்டாம் என்றேன். இந்த பிரச்­சி­னை­களைத் தொடர்ந்தே நான் பாரா­ளு­மன்­றத்தை கலைத்தேன்.

வேட்­பாளர் தெரிவு

சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்யும் முறைமை அக்­கட்­சி­யினுள் இருப்­ப­வர்­க­ளுக்கே தெரியும். விசே­ட­மாக விண்­ணப்பம் கோரப்­பட்டு வேட்பு மனு குழு நிய­மிக்­கப்­பட்டு அதற்கு மத்­திய செயற்­குழுவின் அனு­மது அளிக்­கப்­பட்டே அந் நட­வ­டிக்கை இடம்­பெறும்.

இந் நிலையில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்பு மனு வழங்­கு­வதில் துளி­ய­ளவும் எனக்கு இஷ்­ட­மில்லை.

தினேஷ், வாசு, விமல், டியூ உள்­ளிட்­ட­வர்கள் இதே மண்­ட­பத்தில் மஹிந்­த­வுக்கு வேட்பு மனு கோரி நான் முடியாது என்­பதால் என்னை திட்டி விட்டு சென்­றனர்.

இந்த சுவர்­க­ளுக்கு பேச முடி­யு­மாக இருந்தால் இவை சாட்­சியம் சொல்லும்.

சு.க.வில் மைத்­தி­ரிக்கு இருந்த இரு வழிகள்

இதனைத் தொடர்ந்து சுதந்­திர கட்சி மற்றும் கூட்­ட­மைப்பு தொடர்பில் எனக்கு இரு வழி­களே இருந்­தன.

ஒன்று நான் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும்.

தலைமை பத­வியில் இருந்து வில­கினால்…

நான் தலைமை பத­வியில் இருந்து வில­கினால் அந்த இடம் நிச்­சயம் மஹிந்த ராஜபக் ஷவுக்கே செல்லும். நான் அப்­படி மஹிந்­த­வுக்கு தலைமை பத­வியை கொடுப்­பது அநி­யா­ய­மா­கி­விடும். அப்­படி மஹிந்த கட்­சிக்கு தலைமை தாங்­கினால் நல்­லாட்­சிக்­காக ஒத்­து­ழைத்த கட்சி உறுப்­பி­னர்­களின் நிலைமை கேள்­விக்குள்ளாகிவிடும். அவர்கள் வீட்­டுக்கு செல்ல வேண்­டிய நிலையே ஏற்­படும். வேட்பு மனுக்கள் அவர் சார்ந்­த­வர்­க­ளுக்கே வழங்­கப்­பட்­டி­ருக்கும்.

மஹிந்த பிர­ப­ல­மா­னவர் என நான் கூற மாட்டேன். அவர் தோல்­வி­ய­டைந்த ஒரு சரித்­திரம்.

இந் நிலையில் மஹிந்­த­வுக்கு வேட்பு மனு வழங்­கு­வதே இரண்­டா­வது வழி.

நாம் மஹிந்­த­வுக்கு வேட்பு மனு வழங்­கா­விட்டால் அவர் சார்ந்தோர் தனி­யாக கூட்­ட­மைப்பு செய்து தேர்­தலில் குதிக்க ஆயத்­த­மா­கவே இருந்­தனர். நான் வேட்பு மனு கொடுத்­தாலும் கொடுக்­கா­விட்­டாலும் மஹிந்த பாராளுமன்­றத்­துக்கு வரப் போவது உறுதி. அதனை தடுக்க முடி­யாது.

இந் நிலையில் எனக்கு சுதந்­திர கட்­சியின் ஒரு பகு­தியை உடைத்­துக்­கொண்டு வெளி­யே­றவும் வாய்ப்­பி­ருந்­தது. அது எனக்கு அழ­கல்ல.

கட்­சியை பிள­வு­ப­டுத்­தாதது ஏன்?

1956 ஆம் ஆண்டு முதல் இந் நாட்டை ஐ.தே.க.வும் சுதந்­திர கட்­சி­யுமே மாறி மாறி ஆட்சி செய்­கின்­றன. இவ்­வாறு இருக்­கையில் கடந்த காலங்­களில் இவ்­விரு கட்­சி­க­ளிலும் ஏற்­பட்ட பிள­வுகள் ஜன­நா­ய­க­மற்ற செயற்பாடுகளையே பலப்­ப­டுத்­தின. 1972 தேர்­தலின் பின்னர் நடந்­தது என்ன.

பண்­டார நாயக்­கவின் கீழ் அமைச்­ச­ராக தயா­ரான ஜே.ஆர்.

பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் கீழ் அமைச்­ச­ராக இருக்க ஜே.ஆர். ஜய­வர்த்­தன கூட தயா­ராக இருந்தார். அந்தக் கட்­சிக்கு அப்­போது 7 ஆச­னங்கள் மட்­டுமே இருந்­தன.

இந் நிலையில் கட்­சிக்குள் பிளவு ஏற்­பட்­டது. இதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தேர்­தலை ஐ.தே.க. ஆறில் ஐந்து பெரும்­பான்­மை­யுடன் வெற்­றி­கொண்­டது. அதன் பிர­தி­பலன் அர­சியல் யாப்பே மாறி­யது.

குழப்­பத்தின் ஆரம்பம்

தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்கள் மஹிந்­தவால் ஏற்­பட்­ட­தன்று.

தற்­போ­துள்ள அர­சியல் குழப்­பங்­களின் ஆரம்பம். இந்த 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். காலத்தில் ஆரம்­ப­மா­னதே. அதன் தொட­ரையே இன்று நாம் அனு­ப­விக்­கின்றோம்.

நாட்டின் அர­சியல் கலா­சா­ரத்தை சீர­ழித்­தது இந்த யாப்பு மாற்றம் தான்.

mahinda_rajapaksa4-Copy-Copyமஹிந்த தோல்­வி­ய­டைந்த ஜனா­தி­பதி

நான் பொது வேட்­பா­ள­ராக பெய­ரி­டப்­பட்ட போது எதிர்க்­கட்சித் தலைவர், பிர­த­ம­ராக கூட இருக்­காத ஒரு­வரால் எப்­படி ஜனா­தி­ப­தி­யாக இருக்க முடியும் என கிண்­ட­ல­டித்­தனர். எனினும் நாட்டில் வர­லாற்றில் தோல்வியடைந்த ஜனா­தி­பதி மஹிந்த மட்­டுமே. ஏனையோர் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் அர­சி­ய­லுக்கு வரவில்லை.

ஐ.தே.க.வின் பிளவும் 18 ஆம் திருத்­தமும்

இந் நிலையில் 2010 ஆம் ஆண்டு தேர்­தலை எடுத்துப் பாருங்கள். ஐ.தே.க.வால் பெற்­றுக்­கொண்ட உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையைக் கூட பாது­காக்க முடி­யாமல் போனது.

ஒரே தட­வையில் 22 பேர் மஹிந்­த­வுடன் இணைந்து அமைச்சுப் பத­வி­களைப் பெற்­றுக்­கொண்­டனர். இதன் பிரதிபலன் 18 ஆம் திருத்தம் நிறை­வேற்­றப்­பட்டு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை மன்னர் முறைக்கு ஒப்­பாக மாற்­றப்­பட்­டது.

இந் நிலையில் அப்­போது ஐ.தே.க.பிள­வு­ப­டா­தி­ருந்­தி­ருந்தால் 18 நிறை­வே­றி­யி­ருக்­காது. எதிர்க்­கட்சி ஸ்திர­மாக இல்­லா­மை­யி­னா­லேயே 18 நிறை­வேற்­றப்­பட்­டது. பிள­வில்­லாமல் இருந்­தி­ருந்தால் 18 நிறை­வே­றி­யி­ருக்­காது.

சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்த விரும்­பா­மைக்­கான காரணம்

கடந்த காலத்தை வைத்தே எதிர்­காலம் தொடர்­பி­லான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும். அதன் அடிப்­ப­டை­யி­லேயே சுதந்­திரக் கட்­சியை உடைத்துக் கொண்டு செல்ல நான் விரும்­ப­வில்லை. அப்­படி உடைத்தால் அது நாளை ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான சக்­தி­க­ளுக்கு வாய்ப்­பாக அமை­யலாம்.

சுதந்­திரக் கூட்­ட­மைப்பு 100 வீதம் மஹிந்­த­வுடன்; ஆனால் நானில்லை

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு 100 வீதமும் சுதந்­திர கட்­சியில் 99 வீதமும் மஹிந்­தவை மீண்டும் கொண்­டு­வர விரும்­பு­கின்­றனர். எனினும் நான் அதனை முற்­றாக எதிர்க்­கின்றேன். அதனை நான் விரும்­ப­வில்லை. அத­னா­லேயே உங்கள் பெரும்­பான்மை தீர்­மா­னத்தின் படி செய்­து­கொள்­ளுங்கள். அதில் நான் இல்லை என கட்­சி­யிடம் நான் கூறி­விட்டேன்.

யார் ஆட்சி அமைத்­தாலும் பர­வா­யில்லை

எனக்கு யார் ஆட்­சி­மைப்­பது என்­பது முக்­கி­ய­மல்ல. எனினும் ஜன­வரி 8 ஆம் திகதி பெற்ற புரட்­சியை பாதுகாக்கும் அர­சாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்­பதே எனது எதிர்ப்­பார்ப்பு. அதனால் நான் இம்­முறை தேர்­தலில் நடு நிலை­யா­கவே செயற்­ப­டுவேன்.

நீதி­யான தேர்­த­லுக்கு ஒத்­து­ழைப்பு

நீதி­யான தேர்தல் ஒன்­றுக்­காக தேர்­தல்கள் ஆணை­யாளர், பொலி­ஸா­ருக்கு நான் பூரண ஆத­ரவு வழங்­குவேன்.

கட்சி வென்­றாலும் மஹிந்த பிரதமர் அல்ல

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றாலும், பிரதமர் பதவி என்று வரும்போது மஹிந்த ராஜபக் ஷவைவிட மூத்தவர்கள் பலர் முன்னணியில் இருக்கிறார்கள் .

எனினும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற மாட்டார். அவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார். நான் மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளர் இல்லை.

ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

எனவே ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பெற்றுத் தந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதனை தாரைவார்த்து விடாதீர்கள் என்பதையே என்னால் கூற முடியும் என்றார்.

Share.
Leave A Reply