ஏறாவூர் – கோரகல்லிமடு பகுதியில் பிறந்து ஒரே நாளேயான தனது சிசுவை நிலத்தில் புதைத்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் நேற்று தனக்கு வயிற்றுவலியும் இரத்தப்போக்கும் இருப்பதாக தெரிவித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்தியப் பரிசோதனை மேற்கொண்டபோது குறித்த பெண் சிசுவொன்றை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இவரிடம் விசாரித்தபோது தான் பிரசவித்த சிசுவை நிலத்தில் புதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் துணிகளினால் சுற்றி உரப்பையில் இட்டு புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

தாய் கைதுசெய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

kulanthaiaaapoliceeea

Share.
Leave A Reply