“ஆசை தான் துன்பத்துக்கு காரணம். அந்த ஆசையை ஒழிக்க ஆசைப்படுங்கள் ” என்று உலகுக்கு போதித்த பேராசான் புத்தர் இந்திய திருநாடு உலகுக்கு அளித்த ஞான கோடையின் உச்சம்.
அரச குடும்பத்தில் பிறந்து துன்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த சித்தார்த்த கௌதமன் என்ற இளவரசன் ஒருநாள் முதல்முறையாக தன் அரண்மனையை விட்டு வெளியே வருகிறார்.
மனிதர்கள் அறியாமையாலும் , ஆசையாலும் துன்பப்படுவதை காண்கிறார். இதுவே இவரை உண்மையான ஞானத்தை தேடுவதற்கு உந்துதலாக அமைகிறது.
புத்தகயா என்ற இடத்தில் ஞான முக்தியடைந்து சித்தார்த்த கௌதமர் மகாஞானி புத்தராக உருவெடுக்கிறார். அப்படி புத்தர் ஞானமடைந்த இடம் இன்று உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் புனித ஸ்தலமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புத்தகயாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
20-1437389657-8716403359-47cb3f2a14-b

புத்த கயா : கி.மு 530 ஆம் ஆண்டு அரண்மனையை விட்டு வெளியேறும் புத்தர் புனித நதியான ப்ஹல்கு நதிக்கரையில் ஒரு அரச மரத்தின் அடியில் தொடர்ந்து மூன்று இரவு பகல் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகிறார். அந்த அரச மரம் 2500 ஆண்டுகள் கடந்து இன்றும் புத்தகயா என்னுமிடத்தில் இருக்கிறது.
20-1437389693-16368837813-49fccc6eda-h

 பீகாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து 90 கி.மீ தொலைவில் கயா மாவட்டத்தில் ‘புத்தகயா’ என்ற இந்த இடம் அமைந்திருக்கிறது. இங்கே தான் புத்தர் ஞானமடைந்த ‘மஹா போதி’ அரச மரமும், மிகப்பெரியதொரு புத்த கோயிலும் அமைந்திருக்கிறது.puthakaya

புத்தர் ஞானமடைந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு பின் அதாவது கி.மு 250 ஆம் ஆண்டு இங்கே வருகை தரும் அசோக மன்னர் போதி மரத்துக்கு நேர் கிழக்கே மஹாபோதி என்ற மிகப்பெரியதொரு கோயிலை கட்டியிருக்கிறார்.

20-1437389663-8716403415-4bae2c3426-b

உலகமெங்கிலும் இருந்து வரும் பௌத்தர்கள் இந்த மகா போதி மரத்தை சுற்றியமர்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றனர். பௌத்த நம்பிக்கைப்படி கலியுகத்தின் முடிவில் இந்த அண்டம் பிரளயத்தால் அழியும் போது இந்த போதி மரம் தான் கடைசியாக அழியும் என்றும் பின் புதிய உலகம் படைக்கப்படும் போது இந்த மரம் தான் முதலில் தோன்றும் எனவும் சொல்லப்படுகிறது.

20-1437389650-8570930682-e1c9bf53bc-k

இந்த கோயிலானது அசோக மன்னரால் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும் பின்னர் வந்த தொல்லியல் ஆய்வு முடிவுகளின்படி அசோகர் காலத்தில் சிறிய அளவில் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது என்றும் பின்னர் கி.பி 5ஆம் நூற்றாண்டில் தற்போதிருக்கும் பிரம்மாண்ட கோயிலாக கட்டப்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

20-1437389632-3616311540-f1b8cc0efc-o

எப்படியிருந்தாலும் இந்த மகா போதி கோயிலானது 2000 வருடங்கள் பழமையானது ஆகும். மேலும் இந்தியாவில் செங்கல்லை கொண்டு கட்டப்பட்ட மிகப்பழமையான கட்டிடமும் இது தான்.

20-1437389681-8717523450-03c3cd2cb2-b

பௌத்தம் இந்தியாவில் தோன்றிய மதமாக இருந்தாலும் நாளடைவில் இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் ஹிந்து மதத்தின் பரவல் ஆகியவற்றினால் புத்த மதம் வலுவாக வேரூன்ற முடியாமல் போகிறது. பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்த இந்த கோயிலானது 12ஆம் நூற்றாண்டில் துருக்கிய சேர்ந்த இஸ்லாமிய மன்னரின் படையெடுப்பால் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

20-1437389687-8717523628-de35d789ac-b

இதன் பின்னர் கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகள் கழித்து 1880களில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்த கோயிலானது புதுப்பிக்கப்பட்டது. இப்போது பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலானது யுனெஸ்கோ அமைப்பினால் உலகின் மிக முக்கிய புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
20-1437389669-8716405073-17563cdd6b-b

இந்தியாவில் இருக்கும் மிகத்தொன்மையான இடங்களில் ஒன்றான இந்த புத்த கயா நாம் வாழ்கையில் ஒருமுறையேனும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

20-1437389638-5380197797-2269499670-b

எப்போது செல்லலாம் ? : அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் புத்தகயாவுக்கு செல்ல செய்ய ஏற்ற பருவமாகும். இருப்பினும் முக்கியமான திருவிழாக்கள் அல்லது சடங்கு நிகழ்ச்சிகளை காண விரும்பும் யாத்ரீகர்கள் அதற்குரிய நாட்களில் பயணம் மேற்கொள்வதில் தடையேதுமில்லை.1280px-Bodhgaya21

800px-Bodhgaya201280px-Bodhgaya181920px-Bodhgaya10

800px-Bodhgaya2800px-Bodhgaya15800px-Mahabodhitemple

Share.
Leave A Reply