புத்தளத்தில் இருந்து இலவங்குளம் விதியின் ஊடாக மன்னார் நோக்கி வந்த வாகனம் கல்லாத்து பாலத்தில் வைத்து தடம் புரண்டதன் காரணமாக முன்று பேர் மரணம் இன்னும் பலரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.
அனைவரும் மன்னார் பெரியமடு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இறந்தவர்களின் சடலங்கள் சிலாவத்துறை மற்றும் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளன.
புத்தளத்தில் இருந்து இலவங்குளம் விதியூடாக மன்னார் நோக்கி பயணித்த படி ரக வாகனம் சிலாபத்துறை வீதி கல்லாத்து பாலத்தில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் குறித்த வாகனத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் உளுக்காப்பள்ளம் கிராமத்தில் வசித்து வரும் இவர்கள் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு மற்றும் பெரிய மடு ஆகிய கிராமத்தில் உள்ள தமது உறவினர்களை பார்வையிடுவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை(21) காலை புத்தளத்தில் இருந்து இலவங்குளம் வீதியூடாக படி ரக வாகனத்தில் மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த போது சிலாபத்துறை வீதி கல்லாத்து பாலத்தில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.
இதன் போது குறித்த படி ரக வாகனத்தில் பயணித்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
காயப்பட்டவர்கள் உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் சிறுவர்கள்,பெண்கள்,ஆண்கள் என 11 பேர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகன்றனர்.
உயிரிழந்தவர்கள் என்.பி.ஜௌபர் (வயது-63), எஸ்.எச்.ரஜீம் (வயது-68)ஏ.ஆர்.சுகைல்(வயது-42) ஆசிரியர் ஆகிய மூன்று பேரூமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மக்கள் கடந்த யுத்த காலத்தில் விடத்தல் தீவு மற்றும் பெரிய மடு ஆகிய கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வருவதாக தெரிய வருகின்றது.