ஸ்கொட்லாந்தில் உள்ள ஹூட்டானன்னி எனும் உணவு விடுதியில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயமாக ஸ்கொட்லாந்தின் பாரம்பரிய உடையான பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.
ஆண்கள் பாவாடை அணிவது கேலிக்குரிய விடயமாகக் கருதப்படுகின்ற போதும் இந்த விடுதியில் நல்ல சம்பளம் வழங்கப்படுவதன் காரணமாக அங்கு பணிபுரியும் ஆண்கள் பாவாடை அணிந்தனர்.
இந்த விடுதிக்கு வரும் பெண்கள் சிலர் மது அருந்திவிட்டு பாவாடை அணிந்திருக்கும் ஊழியர்களைக் கிண்டல் செய்து, அவர்களின் பாவாடையை இழுத்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் விளையாட்டு என்று நினைத்த ஊழியர்கள், இப்படிப்பட்ட விஷயங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததில் மனம் உடைந்து போனார்கள்.
இனிமேல் பாவாடைகளை அணிந்து வேலை செய்ய முடியாது என விடுதி மேலாளரிடம் ஊழியர்கள் தெரிவித்துவிட்டனர்.
வாடிக்கையாளர்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஊழியர்களும் முக்கியம் என்று கூறிய மேலாளர், இனி யாரும் பாரம்பரிய பாவாடையை அணிய வேண்டாம் என தெரிவித்துவிட்டார்.