75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது.

ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்தபோது அதில் 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் விஷப்பவுடர், 4 ஜி.பி.எஸ். கருவிகள், ரூ. 46,200 ரொக்கம், இலங்கை பணம், 7 கைபேசி இருந்தது. இதனை பறிமுதல் செய்த பொலிஸார் 3 பேரையும் கைது செய்து உச்சிப்புளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், 3 பேரில் ஒருவர் இலங்கை தமிழரான கிருஷ்ணகுமார் (வயது 30), எனவும், இவர் திருச்சி கே.கே.நகரில் வெளிப்பதிவு அகதியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.

மற்ற 2 பேர் ராமேசுவரம் அருகே உள்ள தில்லை நாச்சியம்மன் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் எனவும், மற்றொருவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சியை சேர்ந்த கார் டிரைவர் சசிக்குமார் எனவும் தெரியவந்தது.

கைதான கிருஷ்ணகுமார் 1990–ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்.

அந்த இயக்க தலைவரான பிரபாகரனிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது கிருஷ்ணகுமார் அங்கிருந்து தப்பி அகதியாக தமிழகம் வந்துள்ளார்.

அவர் இங்கிருந்து தப்பித்து இலங்கை செல்வதற்காக பலமுறை ராமேசுவரம் வந்துள்ளார். ஆனால் அவரது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளன.

அப்போது அவருக்கு உதவி செய்ய ராஜேந்திரன், சசிக்குமார் முன் வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றபோது பொலிஸில் பிடிபட்டுள்ளனர்.

நேற்று கைது செய்த 3 பேரையும் பொலிஸார் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணையில் கிருஷ்ணகுமார் எந்தவித தகவல்களை தெரிவிக்க மறுத்து வருகின்றார்.

எதற்காக சயனைடு குப்பிகள், ஜி.பி.எஸ். கருவிகள், விஷ மருந்துகள் கடத்தப்பட்டது என 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் இது குறித்து எந்த தகவல்களையும் தெரிவிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இவர்களிடம் 2–வது நாளாக ‘ரா’ உள்ளிட்ட புலனாய்வு அமைப்பினரும் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் பின்னணியில் பெரிய சதி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கிய சகா உட்பட தமிழ்நாட்டில் ஐவர் கைது

sainaitஇந்தியாவில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவதால், புலிகள் இயக்கத்தினரை சிறப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

தமிழகத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் அவரது ஆதரவாளர்களும் கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீ சாரால் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறார் கள்.

அனைத்து மாவட்டங்களி லும் உள்ள இலங்கை அகதிகள் முகாமும் போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாகன சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாத புரத்தில் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் வாகன சோதனையின் போது பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

மதுரையில் இருந்து ராம நாதபுரம் செல்லும் சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராம நாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.

சசிகுமார் என்பவர் காரை ஓட்டி வந்தார். காருக்குள் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் கிருஷ்ணகுமார் (39) இன்னொருவர் பெயர் ராஜேந்திரன் (44) என்பது தெரிய வந்தது. 2 பேரின் உடமைகளையும் போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது கிருஷ்ணகுமார் வைத்திருந்த பையில், 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் சயனைடு, 4 ஜி.பி.எஸ். கருவிகள், 8 செல் போன்கள் ஆகியவை இருந்தன.

42, ஆயிரத்து 200 ரூபாய் இந்தியன் கரன்சியும் 19 ஆயிரத்து 300 ரூபாய் இலங்கை கரன்சியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கிருஷணகுமாரை தனிமைப் படுத்தி அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப்புலி என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதி காரிகள், கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கைது இருவர் இலங்கைத் தமிழ் அகதிகளாவர். ஏனையோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளாலேயே சயனைட் குப்பிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள அலவெட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ண குமார் கடந்த 1990-ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

prabhakaran_assistantபிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர், அவருடனேயே நீண்ட நாட்கள் ஒன்றாகவே இயக்க பணிகளில் ஈடுபட்டு வந்துள் ளார்.

இறுதிக்கட்ட போர் நடந்த போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பலர் அணி அணியாகவும், தன்னந் தனியாகவும் இலங்கையை விட்டு வெளியேறினர். அப்போது தான் கிருஷ்ண குமாரும் தமிழகத்துக்கு வந்துள்ளார்.

திருச்சியில் கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட் பட்ட பகுதியில், அவர் தங்கி இருந்து வந்துள்ளார். அகதிகள் முகாமில் தங்காமல் வெளியிலேயே வாடகை வீட்டில் கிருஷ்ணகுமார் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு திருச்சியில் இருந்து புறப்பட்ட அவர் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலமாக ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது தான் போலீசில் சிக்கிக் கொண்டார்.

இதையடுத்து கிருஷ்ணகுமாரை கைது செய்துள்ள போலீசார் அவரை சிறப்பு அகதிகள் முகாமில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகுமார் கடல் மார்க்கமாக கள்ளத்தோணி யில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டு செயல் பட்டுள்ளார்.

75 சயனைடு குப்பிகள் மற்றும் சயனைடு பொட்டலங்களுடன் அவர் இலங்கைக்கு செல்ல முயற்சி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு சப்ளை செய்வதற்காக இவர் இதனை எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் இலங்கையில் மீண்டும் புலிகள் இயக்கத்தினர் வலுவாக தடம் பதிக்க தயாராகி வருவதும் உறுதியாகி உள்ளது என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

கிருஷ்ண குமாருக்கு உதவி கள் செய்த குற்றத்துக்காக டிரைவர் சசிகுமார், ராஜேந் திரன் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

 

Share.
Leave A Reply