நாய் என்றால் நன்றி என்ற சொல் எமக்கு நினைவில் வரும். ஆனால் சிலர் தங்களுக்கு கோபம் வரும்போது கோபத்தை பிரதிபலிக்க மற்றையவர்களை நாய் என்று திட்டுவதும் உண்டு. காரணம் நாய் என்ற பிராணியிடம் நல்ல, கெட்ட குணங்கள் இரண்டும் உண்டு.
நன்றாக பழக்கினால் நாய் நாம் சொல்வதைச் செய்யும். அதற்கு சிறந்த உதாரணம் ஒன்று பாணந்துரை நகரில் பதிவாகியுள்ளது.
முதியவர் ஒருவர் தன்னிடம் உள்ள கறுப்பு, வெள்ளை நிறத்திலான நாய்கள் இரண்டினை நன்கு பழக்கி அவர் சொல்வதை எல்லாம் செய்ய வைக்கிறார்.
நாய்கள் இரண்டும் சில்லு வண்டி ஓடுகிறது. உயரம் பாய்கிறது. இந்த காட்சிகள் பார்ப்பவர்களையும் சிறுவர்களையும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. பார்வையாளர்கள் தாங்கள் பெறும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவென நாய்களை பழக்கிய முதியவருக்கு பணம் வழங்கி ஊக்குவிக்கின்றனர்.
அந்தக் காட்சிகளை இதோ நீங்களும் கண்டு களியுங்கள்.