எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷ அங்கு வந்திருந்த ஒருவரை தாக்குதல் நடத்தியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சம்பம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ,

”ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான ஆதரவாளர் ஒருவர் என் மீது கொண்ட பாசத்தால் எனது கையை பிடித்து இழுத்தார்.

அவர் மதுபோதையில் இருந்திருப்பார் என நினைக்கின்றேன் இதன் போது எனது கைவிரலை உடைய பார்த்தது. எனது கைவிரலை பாதுகாப்பதற்காக நான் அவரை எனது ஒரு கையால் பிடித்து தள்ளினேன்.

ஆனால் நான் அவரை தாக்கியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.”

mahinda-Rajapaksa-To-Attack-UPFA-Supporter_0

தன் கையை பிடித்தவரை பாய்ந்து தாக்கிய மஹிந்த ராஜபக்ச – அதிர்ச்சி வீடியோ
22-07-2015
பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அக்குரஸ்ஸ நகரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு பழைய பஸ்தரிப்பிடத்திலேயே பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தேர்தல் பிரசாரக்கூட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமானது. மஹிந்த ராஜபக்ஷ மாலை 5.30க்கு வருகைதந்தார். குண்டுகள் துளைக்காத பென்ஸ் காரில் வந்திறங்கிய அவர், குழுமியிருந்த மக்களுக்கு இடையிலேயே மேடையை நோக்கி சென்றார்.

அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவின் கையை பிடித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் ஏதோவொரு குழப்பத்தில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் முகத்தில் ஒருவிதமான மாற்றம் திடீரென ஏற்பட்டது.

தன் கையை பிடித்தவரை நோக்கி மஹிந்த ராஜபக்ஷ கையை ஓங்கினார. மஹிந்த, தாக்குதல் நடத்த முயற்சித்த போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிகொண்டிருந்த பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த மூவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷவை பின்தள்ளிவிட்டனர். அவர் விழ பார்த்தார். எனினும், மஹிந்தவுக்கு பின்னால் இருந்த பாதுகாப்பு தரப்பினர் மஹிந்தவை பிடித்துவிட்டனர்.

அதன் பின்னர், அக்குரஸ்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அக்குரஸ்ஸ வேட்பாளர் மனோஜ் சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை மேடைக்கு அழைத்துசென்றார்.

அந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எதுவுமே கூறவில்லை.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ, தன்னை பாதுகாத்து கொள்வதற்காகவே இவ்வாறு செய்தார் என்று மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply