தங்காலை – பல்லிக்குடா பிராதசத்தில் இன்று காலை பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழுவைச் சேர்ந்த நபர், தங்காலை காவற்துறை நிலைத்தில் இருந்து தமது வீட்டுக்கு செல்லும் வழியிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவர் தங்கால்ல காவற்துறைநிலையத்துக்கு சென்று கையொப்பம் இடவேண்டும்.

அவருக்க எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் காவற்துறை நிலையத்தில் கைச்சாத்திட்டுவிட்டு திரும்பி சென்ற போது, வெள்ளைநிற வாகனம் ஒன்றில் வந்த சிலர் அவர் மீதும் அவருடன் வந்த மேலும் இரண்டு பேரின் மீதும் துப்பாக்கித் தாக்குதலை நடத்திச் சென்றுள்ளனர்.

இதில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் கொல்லப்பட்ட உக்குவா என அழைக்கப்படும் நிலுக இந்திக பிரசன்ன, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்பு கொண்டவர் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

Share.
Leave A Reply