தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் வளர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர், நடித்த அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றுள்ளன.

ஆரம்பத்தில் அறிமுக நடிகைகளிடம் ஜோடி சேர்ந்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.

அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் நான் அறிமுகமான ‘மெரீனா’ படத்தில் என்னுடைய சம்பளம் ரூ.10 ஆயிரம்தான். ஆனால், கடைசி படத்திற்கு நான் வாங்கிய சம்பளம் ரூ.3 கோடிக்கும் மேல்.

அதேபோல், சினிமாவில் என்னுடைய நெருங்கிய தோழிகள் ஹன்சிகாவும், ஸ்ரீதிவ்யாவும்தான். அவர்கள்தான் என்னிடம் அடிக்கடி பேசி வருகிறார்கள்.

தனுஷ் எனக்கு நண்பன் இல்லை. ஒரு நண்பனாக நாம் யார் மேலாவது கை போட்டு பேசலாம். ஆனால், அவர் மீது அப்படி கைபோட்டு பேசமுடியாது.

ஏனென்றால், அவர் எனக்கு சீனியர். அதனாலேயே அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறேன். அவர்மீது எனக்கு எப்போதுமே தனி மரியாதை இருக்கிறது. மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

நான் தொடர்ந்து பொழுதுபோக்கான திரைப்படங்களிலேயே நடிக்க ஆசைப்படுகிறேன். இப்போதைக்கு வேறு எந்த புது முயற்சியிலும் இறங்கப் போவதில்லை. என்னுடைய அடுத்த படம் ரொமான்டிக் காமெடியாக இருக்கும் என்று பேசினார்.

தனி ஒருவன் டீஸர்/ Thani Oruvan – Official Teaser

Share.
Leave A Reply