வவுனியாவில் நடந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் சிறிதரன் புலிகளைப் பற்றி கேவலமாகப் பேசியது உண்மை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தைச் சந்தித்த முக்கியஸ்தர் ஒருவருக்கே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘முள்ளிவாய்க்காலில் புலிகள் சயனைட் கடித்து செத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாம் இங்கு எதற்காக வந்து நிற்கின்றார்கள்‘ என்று சிறிதரன் சொன்னார்.
சிறிதரன் இவ்வாறு சொல்லும் போது அருகில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான சிவஞானம் உட்பட பலர் இருந்தனர்.
சிறிதரன் இவ்வாறு சொன்ன போது நான் சொன்னேன் ‘புலிகளே இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களை மௌனிக்கின்றோம் எனச் சொன்னார்கள்.
பின்னர் ஏன் புலிகள் சயினட் கடிக்க வேண்டும் என சிறிதரனைக் கேட்டேன்‘ இவ்வாறு சிறிதரன் குறித்த முக்கியஸ்தருக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறிதரன் கூறியதை அங்கு நின்றவர்கள் மறுப்பார்களா? எந்தக் கோவிலிலும் சென்று கற்புரம் கொழுத்தி சத்தியம் செய்வார்களா? அல்லது சிறிதரனின் போக்கிலேயே இவர்களும் செயற்படுகின்றார்களா?
விடுதலைப்புலிகளை ஆரம்பிக்க முயன்றார்கள் என தெரிவித்து சுட்டுக் கொல்லப்பட்ட அப்பன், தேவிகன் போன்றவர்களையும் சிறிதரன் என்ற குள்ளநரியே காட்டிக் கொடுத்தது அப்பட்டமான உண்மை.
தனது மனைவியின் தம்பியான தீபனையே பொய் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து புலித்தலைமைக்கு கடிதம் எழுதிய சிறிதரன் எனும் குள்ளநரி பின்னர் புலிகளால் கைது செய்யப்பட்டு கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது யாருக்காவது தெரியுமா?
தனது பாலியல்லீலைகளை கண்டுபிடித்த தனது மனைவிக்கு சிறிதரன் வீட்டுக்குள் வைத்து அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்த போது அங்கு தனது பிஸ்டல் துப்பாக்கியை சுழற்றிக் கொண்டு வந்த தீபனைக் கண்ட சிறிதரன் தன்னைச் சுடவே தீபன் வருவதாக நினைத்து வேலி பாய்ந்து ஓடியது யாருக்காவது தெரியுமா? அதன் பின்னரே தீபனைப் பற்றி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிறீதரனின் பாலியல்லீலைகள் ஆதாரபுர்வமாக ஏராளமானவை பல ஊடகவியலாளர்களிடம் இருந்தும் அவர்கள் அதனை வெளிப்படுத்தாது மௌனமாக இருப்பது சிறிதரனின் நடவடிக்கைகளுக்கு துாண்டுகோலாக அமையும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
தனது தம்பியால் நடாத்தப்படும் லங்காசிறி ஊடகத்தை வைத்துக் கொண்டு சிறிதரன் எனும் புறம்போக்கு செய்யும் இவ்வாறான செயற்பாடுகளை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
இதே வேளை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு இரணைமடுத் தண்ணீரைக் கொடுக்கவிடாது தடுத்து நிறுத்தியது இந்தச் சிறிதரனே.
யாழ்ப்பாணம் மற்றும் தீவகப் பகுதி மக்கள் நீரின்றிச் செத்தாலும் அது பற்றிக் கவலையில்லை.
இரணைமடுத் தண்ணீரை நிறுத்தியே ஆகுவேன் என்று ஒற்றைக்காலில் நின்று நிறுத்திய இந்தக் குள்ள நரி தற்போது எந்த முகத்துடன் யாழ்ப்பாணத்தில் வந்து வாக்குக் கேட்கின்றது என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-மூலம். new jaffna-