புறக்­கோட்டை, பெஸ்­டியன் மாவத்­தை யில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த பய­ணிகள் பொதி­யொன்­றுக்குள் இருந்து இளம் பெண்­ணொ­ரு­வரின் சடலம் நேற்று பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டது.

கைவி­டப்­பட்­டி­ருந்த குறித்த கறுப்பு நிறத்­தி­னா­லான பெரிய பொதி­யினை திறந்து பார்த்த புறக்­கோட்டை பஸ் தரிப்பு நிலை­யத்தின் நடை­பாதை வியா­பாரி ஒருவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வலின் பிர­காரம் குறித்த இடத்­துக்கு விரைந்த புறக்­கோட்டை பொலிஸார் இந்த சட­லத்தை நேற்று காலை 9.00 மணி­ய­ளவில் மீட்­டனர்.

இதனையடுத்து புறக்கோட்டை பஸ்நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது. மக்கள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடியதை அவதானிக்க முடிந்தது.

28 வய­துக்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்ட பெண் ஒரு­வரே இவ்­வாறு அந்த பயணப் பொதிக்குள் மர்­ம­மாக உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டுள்ளார்.

pennசந்­தே­கத்­துக்கு இட­மான வெளிக் காயங்கள் அவ­ரது உட­லில் காணப்­ப­டாத நிலையில் மூக்­கி­லி­ருந்து இரத்தம் வழிந்­த­மைக்­கான அடை­யாளம் மட்டும் இருந்­த­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

அத்­துடன் சட­ல­மா­னது அரை நிர்­வா­ண­மாக இருந்­த­தா­கவும், மேல் பகுதி ரீ சேட் அணிந்­தி­ருந்­ததால் மறைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் கீழ் பகு­தியில் நீல நிற உள்­ளாடை மட்­டுமே இருந்­த­தா­கவும் அந்த பொலிஸ் அதி­காரி மேலும் குறிப்­பிட்டார்.

பெட்­டிக்குள் குறித்த பெண்­ணு­டை­யது என சந்­தே­கிக்­கத்­தக்க ஆடைகள் பலவும் இருந்­த­தா­கவும் சட­லத்­திலும் கழுத்திலும், இடது கையிலும் தங்கச் சங்­கி­லிகள் இருந்­த­தா­கவும் காதில் உள்ள கம்­மல்­களும் அப்­ப­டியே இருந்­த­தா­கவும் கழுத்தில் இருந்த சங்­கி­லியில் பென்டன் ஒன்றும் காணப்பட்டதாகவும் அந்த பொலிஸ் அதி­காரி மேலும் குறிப்­பிட்டார்.

கறுப்பு நிற­மான அந்த பெட்­டி­யா­னது 15 ஆம் இலக்க கொழும்பு – அனு­ரா­த­புரம் தனியார் அரை சொகுசு மற்றும் சாதா­ரண கட்­டணம் அற­விடும் 31 ஆம் இலக்க தரிப்­பி­டத்­தி­லேயே கைவி­டப்­பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் கொழும்பு – அனு­ராதபுரம் பஸ் வண்­டி­க­ளுக்கு மேல­தி­க­மாக கொழும்­பி­லி­ருந்து, ஸ்ரீபுர, கஹட்­ட­கஸ்­தி­கி­லிய, ஹொரவ­பொத்­தானை, கல்­னேவ மற்றும் வேவல ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு செல்லும் பஸ் வண்­டி­களும் நிறுத்­தப்­ப­டு­வதற்கான அடையாளங்களும் காணப்பட்டன.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்றுக் காலை புறக் கோட்டை பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை தொடர்­பு­கொண்­டுள்ள புறக் கோட்டை பஸ் தரிப்பு நிலை­யத்தின் நடை பாதை வியா­பா­ரி­யான செல்­லையா வீரப்பன் என்­பவர் கைவி­டப்­பட்ட பெட்­டி­யொன்­றுக்குள் சடலம் ஒன்று காணப்­ப­டு­வ­தாக தகவல் அளித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்தே காலை 9.30 மணி­ய­ளவில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சட­லத்தை மீட்டனர். எனினும் நேற்று மாலை வரை குறித்த சட­லத்தை அடை­யாளம் காண முடி­யாத நிலையில் கொழும்பு புதுக்­கடை 9 ஆம் இலக்க நீதிவான் திலின கம­கேயின் மஜிஸ்­திரேட் பரி­சோ­த­னையின் பின்னர் சட­ல­மா­னது பொலிஸ் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினூடாக கிடைத்த சில தகவல்கள் வருமாறு

சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் கடந்த இரு வரு­டங்­க­ளாக சார­தி­யாக கட­மை­யாற்றி வந்த எம்.எம்.சி. மொஹித்தீன் என்­பவர் தனது மனை­வி­யுடன் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் இருந்து தனது சொந்த ஊரான அனு­ர­த­பு­ரத்தை நோக்கிச் செல்ல புறக் கோட்டை பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்­த­மான சொகுசு பஸ் ஒன்றில் வந்­துள்ளார்.

அந்த பஸ்ஸில் இருந்து இறங்­கி­யுள்ள அவர் தனது பயணப் பொதி­க­ளுடன் போக்கு வரத்து சபை பஸ் தரிப்பு நிலை­யத்தில் இருந்து பெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு வந்­துள்ளார்.

இதன் போது அவ­ரது பொதி­களை தூக்கி வரு­வதில் சிர­மங்கள் இருக்­கவே சுமார் 48 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் அவ­ருக்கு அதனை சுமந்து செல்ல உத­வி­யுள்ளார்.

குறித்த உதவி செய்த நபர் தானும் தம்­புள்­ளைக்கு செல்ல வேண்டும் என தெரி­வித்து சுமு­க­மா­கவே உரை­யாடி 15 ஆம் இலக்க பஸ் தரித்து நிற்கும் இடத்தை நோக்கி சென்­றுள்­ளனர்.

அதிக சுமை ­கா­ர­ண­மாக பொதியை பிடித்­தி­ருந்த கையை எடுத்து மறு­கைக்கு மாற்ற மொஹிதீன் முனைந்த போது குறித்த நபர் அப்­பொ­தி­யுடன் அங்­கி­ருந்து பிறி­தொரு பஸ் வண்­டிக்குள் ஏறி மறைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து தனது பயணப் பொதியைத் தேடி மொஹிதீன் பஸ் தரிப்பு நிலையம் எங்கும் அலைந்­துள்ளார்.

இதன் போது அங்­கி­ருந்த நடை­பாதை வியா­பா­ரி­க­ளையும் அவர் வின­வி­யுள்ள நிலையில் அவர்­களும் அது தொடர்பில் தேடி­யுள்­ளனர்.

இந்நிலையில் 15 ஆம் இலக்க பாதையில் பய­ணிக்கும் கொழும்பு – அனு­ராதபுரம் பஸ் வண்டி தரிக்கும் இடத்தில் பிர­யா­ணிகள் வரி­சை­யாக இருக்க அங்கு கைவி­டப்­பட்ட கறுப்பு நிற பயணப் பொதி­யொன்று இருந்­துள்­ளது.

மொஹி­தீனின் பயணப் பொதியைத் தேடியோர் அதுவா பொதி என கேட்ட போதும் மொஹிதீன் அது தனது பொதி­யல்ல என தெரி­வித்­துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பொதிக்கு எவரும் உரிமை கோராத நிலையில் அதனை தண்ணீர் போத்­தல்­களை விற்­பனை செய்யும் நடை­பாதை வியா­ப­ரி­யொ­ருவர் திறந்­துள்ளார்.

இதன் போதே துணிகள், ஆடை­க­ளுக்கு மத்­தியில் மடித்து போடப்­பட்­டி­ருந்த சட­லத்தை அவர் கண்­டுள்ளார். இதன் பின்­ன­ரேயே விடயம் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் மேல் மாக­ணத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட, கொழும்பு மத்­திக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த சிறி­வர்­தன ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டா­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக புறக் கோட்டை பொலி­ஸாரும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவும் இணைந்து விரி­வான விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளனர்.

சடலம் மீட்­கப்­பட்­டமை குறித்து அவ்­வி­டத்தில் இருந்த பலரின் வாக்கு மூலங்­களை பதிவு செய்­துள்ள பொலிஸார் புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்­தைலும் அதற்கு அண்­மித்த பகு­தி­க­ளிலும் உள்ள சீ.சீ.ரீ.வி.கண்­கா­ணிப்பு கம­ரக்­க­ளையும் சோதனை செய்து வருகின்றனர்.

வீட்டு வேலைக்காக வருகை தந்திருந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இவ்வாறு பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கொலைக்கு முன்னர் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்க்லாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share.
Leave A Reply