வேல்ஸ் நாட்டில் அபெர்கெல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பவர்கள் வெளியே சென்ற பின்னர் திருடப்போன ஒருவன் அங்கே கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முற்பட்டபோது கை வெட்டுப்பட்டு, அந்த வீட்டின் பரண் இடுக்கில் சிக்கிக் கொண்டான்.

அங்கிருந்து விடுபட எவ்வளவு போராடியும் முடியாததால், உள்ளூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து தன்னை காப்பாற்றும்படி கதறியிருக்கிறான்.

இதைத்தொடந்து, அங்கே வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேர போரட்டத்துக்குபின், அந்த ‘ராசியில்லாத திருடனை’ காப்பாற்றியுள்ளனர்.

இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply