கொலை செய்­யப்­பட்டு பய­ணப்­பெட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட சடலம் வட்­டுக்­கோட்டை சங்­க­ரத்தை சங்­கானை ஓடக்­கரை கிரா­மத்தைச் சேர்ந்த 34 வய­தான ரங்கன் கார்த்­திக்­கா­வி­னது என்று அடை­யாளம் காணப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து, கார்த்­தி­காவின் கணவர் என சந்­தே­கிக்­கப்­படும் நபர் ஒரு­வரை குற்­றப்­பு­ல­னாய்­வுப் ­பிரி­வினர் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் கைது செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

படு­கொலை செய்­யப்­பட்டு பயணப் பொதியில் வைத்து நபர் ஒருவர் தூக்­கி­வரும் காட்சி சி.சி.ரி.வி கம­ராவில் நன்கு பதி­வான நிலையில் தற்­பொ­ழுது சமூ­க­வ­லைத்­த­ளங்கள் மற்றும் முக­நூல்­களில் பலரும் பார்­வை­யிட்டு வரு­வ­தையும் காண முடி­கின்­றது.

கார்த்­தி­காவின் படு­கொ­லைக்கு அடிப்­படைக் காரணம் என்னவென்­பதில் பொலிஸ் தரப்பு விசா­ர­ணைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன. குடும்ப பிரச்சினையே இறு­தியில் இவ்­வா­றான நிலை அவ­ருக்கு ஏற்­படக் காரணம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

இச்­சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் நேரடி கட்­டுப்­பாட்டின் கீழ் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது .

மேலும் உயி­ரி­ழந்த கார்த்­தி­காவின் சட­லத்தை அடை­யாளம் காண்­பிப்­ப­தற்­காக அவ­ரது தாயார் கடந்த 30 திகதி இரவு வட்­டுக்­கோட்­டையில் இருந்து கொழும்­புக்கு வந்­துள்ளார்.

எனவே, புறக்­கோட்டை பொலிஸார் தொடர்ச்­சி­யாக இது தொடர்­பாக கார்த்­தி­காவின் தாயா­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் மூலம் கார்த்­திகா தொடர்­பான பல்­வேறு விட­யங்கள் தெரி­ய­வந்­தி­ருக்­கின்­றன.

ரங்கன் கார்த்­திகா வட்­டுக்­கோட்டை சங்­க­ரத்தை, ஓடக்­கரை கிரா­மத்தைச் சேர்ந்­தவர். சுமார் 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அதே ஊரை சேர்ந்த மாற்று சாதி ஒரு­வரை திரு­மணம் செய்­து­கொண்­டதால் இவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில், 2009 ஆம் ஆண்டு கண­வ­ரு­டனும் குழந்­தை­யு­டனும் கொழும்­புக்கு வந்து குடி­யே­றி­யுள்ளார்.

அதன்பின் 2010 ஆம் ஆண்டு கணவன் சவூ­திக்கு செல்ல, இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான உறவில் விரிசல் ஏற்­பட ஆரம்­பித்­துள்­ளது.

கணவன் அதிகமாக கார்த்­திகா தொடர்­பா­கவும் குழந்தை தொடர்­பா­கவும் அக்­கறை கொள்­ளாத நிலை­யி­லேயே இருந்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய தரு­ணத்தில் தான் விடு­தியில் கார்த்­தி­கா­வுடன் தங்­கி­யி­ருந்த­தாக கூறப்­படும் சந்­தேக நப­ருக்கும் கார்த்­தி­கா­வுக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்­பட்­டுள்­ளது. இரு­வரும் 3 வரு­டங்­க­ளாக கணவன் – மனை­வி போலவே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லை­யி­லேயே கடந்த 29 ஆம் திகதி காலை கொழும்பு, புறக்கோட்டை பெஸ்­டியன் மாவத்­தை­யி­லுள்ள தனியார் பஸ் நிலை­யத்தில் கைவி­டப்­பட்ட பயணப் பொதி­யொன்­றி­லி­ருந்து கார்த்திகா சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

மேலும் அவர்கள் இரு­வரும் செட்­டியார் தெரு­வி­லுள்ள விடுதி ஒன்றில் 22 ஆம் திக­தி­யி­லி­ருந்து 28 ஆம் திகதி வரை சுமார் 7 நாட்கள் தங்­கி­யி­ருந்­தி­ருக்­கின்றார்கள். இது தொடர்­பாக விடு­தியின் முகா­மை­யா­ளரை தொடர்பு கொண்டு கேட்­ட­போது,

“நான் இந்த விடு­தியில் பல வரு­டங்­க­ளாக வேலை செய்து வரு­கின்றேன். இங்கு 16 அறைகள் உள்­ளன. வட பகு­தி­யி­லி­ருந்து வரும் பெரும்­பா­லா­ன­வர்கள் இங்கு தான் வந்து தங்­கு­வார்கள்.

குறித்த இரு­வரும் 22 ஆம் திகதி இங்கு வந்­தார்கள். வரும்­போதே குறித்த பெண்ணின் சூட்­கே­ஸூடன் சேர்ந்து மேலும் 3 பொதிகளும் இருந்­தன.

பார்ப்­ப­தற்கு இரு­வரும் கணவன், மனை­வியைப் போலவே இருந்­தார்கள். அது­மட்­டு­மின்றி, அவர்­க­ளிடம் சமையல் பொருட்களும் இருந்தன.

எனவே, நான் அவர்­க­ளிடம், ”ஏன்? இவ்­வ­ளவு பொருட்கள்” என்று கேட்டேன்” அதற்கு குறித்த நபர் நாங்கள் கொழும்பில் வாட­கைக்கு வீடு ஒன்றை தேடு­கின்றோம் ஒரு கிழ­மையில் கிடைத்து விடும் என்று கூறினார்.

அதுவரையில் இங்கு தங்கியிருப்பதாக கூறினார்கள். நாங்­களும் எவ்­வித தயக்­க­மு­மின்றி அனு­மதி வழங்­கினோம்.

மேலும் அறையின் சாவியை கொடுப்­ப­தற்கு முன் தங்க வரு­ப­வர்­களின் தேசிய அடை­யாள அட்­டையை வாங்­கு­வது வழமை. எனவே அன்றும் அவர்­க­ளிடம் தேசிய அடை­யாள அட்­டையை தரு­மாறு கேட்ட போது குறித்த பெண்ணின் தேசிய அடை­யாள அட்­டையை மட்­டுமே எங்­க­ளுக்கு கொடுத்­தார்கள். எனினும், நான் அதை பெரி­தாக கண்­டு­ கொள்­ள­வில்லை. அவர்­க­ளுக்­காக முதலாம் மாடியில் 5 ஆம் இலக்க அறையை ஒதுக்கி கொடுத்தேன்.

அதன்பின் பெரி­தாக அவர்­க­ளிடம் எதுவும் நான் கதைக்­க­வில்லை. முதலில் மூன்று நாட்களுக்குரிய வாடகை பணத்தை தந்தார்கள்.

மேலும் இரு­வரும் புதி­தாக திரு­மணம் முடித்­த­வர்கள் போல் மிகவும் அந்­நி­யோன்­னி­ய­மாக பழ­கி­னார்கள். எனவே, எனக்கு அவர்கள் தொடர்­பாக எந்­த­வித சந்­தே­கமும் ஏற்­ப­ட­வில்லை. அந்த பெண் பார்ப்­ப­தற்கு நவ நாக­ரிக உடை­க­ளு­ட­னேயே எப்­போதும் காட்­சி­ய­ளித்தார்.

இரு­வரும் மூன்று வேளை உண­வினை எடுப்­ப­தற்­காக வெளியில் சென்று வரு­வார்கள். சம்­ப­வத்­துக்கு முதல் நாள் இரவு தான் இரு­வ­ரையும் ஒன்­றாக கண்டேன்.

அந்த நபர் கணவனா, காதலனா என்று தெரியாது. அதன்பின் மறுநாள் காலை 8.20 மணி­ய­ளவில் நான் விடு­திக்கு சென்ற போது அவர் கொண்டு வந்த சூட்­கே­ஸூ­களை முச்­சக்­கர வண்­டியில் ஏறிக்­கொண்­டி­ருந்தார்.

இறு­தி­யாக பெரிய சூட்­கேஸை அறை­யி­லி­ருந்து வெளியில் எடுத்து கொண்டு போகும் போதே அவர்கள் தங்­கி­யி­ருந்த அறையின் அருகே சென்றேன். அவர் மிகுந்த சிர­மத்­து­ட­னேயே அதை எடுத்து சென்­று­கொண்­டி­ருந்தார்.

எனவே, அதற்கு பிறகு அறை சாவியை என்­னிடம் கொடுத்து விட்டு அந்தப் பெண்ணின் அடை­யாள அட்­டையை பெற்­றுக்­கொண்டு அங்­கி­ருந்து சென்­று­விட்டார்.

அதன்பின் என்ன நடந்­தது என்று எனக்கு தெரி­யாது. அன்­றி­ரவு நான் பேஸ்புக் கணக்கில் எனது நண்­ப­ருடன் தொடர்­பி­லி­ருந்த போது எனது நண்பர் ஒரு­வரே இது பற்றி கூறினார். உடனே நானும் அந்த புகைப்­ப­டத்தை பார்த்தேன். எனக்கு அது பெரிதும் அதிர்ச்­சியாய் இருந்­தது.

எங்­க­ளு­டைய விடு­தியில் தங்­கி­யி­ருந்த பெண் தான் அது என்­பதை நான் இனங்­கண்­டு­கொண்டேன். உடனே சீ.சீ.ரி.வி கெம­ரா­வி­லுள்ள பதி­வு­களை பார்த்து அதை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டு பொலி­ஸா­ருக்கு இது தொடர்­பான தக­வலை வழங்­கினேன்” என்று அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து குறித்த சந்­தேக நபரை ஏற்றிச்­சென்ற முச்­சக்­கர வண்டி சார­தி­யிடம் கேட்ட போது,

“நான் இதற்கு முன்னர் குறித்த சந்­தே­க­நபர் தொடர்­பாக எது­வுமே அறிந்­தி­ருக்­க­வில்லை.  அவர் என்­னிடம் வந்து புறக்­கோட்டை தனியார் பஸ் நிலை­யத்­துக்கு செல்ல வேண்டும்.என்று கூறினார். உடனே நானும் சம்­ம­தித்தேன்.

அவர் ஒன்றன் பின் ஒன்­றாக மூன்று பொதிகளை வாக­னத்தில் ஏற்­றினார். இறு­தி­யாக மிகுந்த சிர­மத்­துடன் பெரிய சூட்கேஸ் பெட்­டியொன்றை வாக­னத்தில் ஏற்­றிக்­கொண்­டி­ருந்தார்.

அப்­போது நானும் அவ­ருக்கு சற்று உத­வினேன். மேலும், இந்த பெட்­டிக்குள் என்ன இருக்­கின்­றது. இவ்­வ­ளவு பார­மா­க­வி­ருக்­கின்­றது? என்றும் வின­வினேன். எனினும் அதற்கு அவ­ரி­ட­மி­ருந்து மௌனம் மட்­டுமே எனக்கு பதி­லாக கிடைத்­தது.

அது­மட்­டு­மின்றி, என்­னுடன் வாக­னத்தில் பய­ணிக்கும் போதும் கூட என்­னிடம் அவர் எது­வுமே பேச­வில்லை. பின் புறக்­கோட்டை தனியார் பஸ் நிலை­யத்தில் இறங்­கினார்.

இதன்­போது அவர் பதற்­றத்­துடன் காணப்­பட்­டதை என்னால் அவ­தா­னிக்க முடிந்­தது. இறங்கும் போது எனக்கு முச்­சக்­கர வண்டி கட்­ட­ண­மாக ரூபா 150 வழங்­கினார் என அவர் கூறினார்.

இந்­நி­லையில் கார்த்­தி­காவின் சட­லத்தை பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­திய போது உயி­ரி­ழப்­புக்­கான தெளி­வான கார­ணத்தை கண்­ட­றி­வதில் சிரமம் ஏற்­பட்­டுள்­ளதால் அவ­ரது உடற்பாகங்கள் இர­சா­யன பகுப்­பாய்­வுக்­காக அனுப்பப்­பட்­டுள்­ளன.

மேலும் செட்­டியார் தெருவிலுள்ள விடு­தியில் இரு­வரும் விடு­திக்கு வரு­வது மற்றும் இறு­தி­யாக இவர்கள் தங்­கி­யி­ருந்த 5ஆம் இலக்க அறை­யி­லி­ருந்து சந்­தேக நபர் 3 அடி நீளம் 2 அடி அகலம் மற்றும் 1 அடி உய­ர­மான கறுப்பு நிற சூட்கேட்ஸ் பெட்­டி­ யொன்றை மிகுந்த சிர­மத்­துடன் விடுதி அறை­யி­லி­ருந்து வெ ளியில் எடுத்து வரு­வது போன்ற காட்­சிகள் சீ.சீ.ரி கம­ராவில் பதி­வா­கி­யுள்­ளதால் சந்­தேக நபரை பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

அத்­துடன் அந்த சூட்கேட்ஸ் பெட்டியை பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றமைக்கான ஆதாரங்களாக சீ.சீ.ரி.வி காட்சிப் பதிவுகளையும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

எனவே கார்த்திகாவுடன் விடுதியில் தங்கியிருந்தவர் யார்? அவரது கணவனா? என்ற பின்னணியில் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாரின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கார்த்திகாவின் கணவர் என்று சந்தேகிக்கப்படும் 34 வயதான நபரொருவரையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே வெளி நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது மேலும், இவரிடமும் பொலிஸார் தொடர்ந்து விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply