சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியதுடன், 16 பேர் காயமடைந்த சம்பவமொன்று உடவலவ செவனகல ஹபரலுஹார பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பலியானவர்கள் இரத்தினபுரி குருவிட்ட பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் என தெரிய வந்துள்ளது.
கதிர்காம யாத்திரை சென்று திரும்பி வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்