மியன்மாரில் தற்போது ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப் பெருக்கினையடுத்து, நான்கு பிரதேசங்களில், மியன்மார் ஜனாதிபதி அவசர காலநிலைமையினை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மியன்மாரில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய அளவிலான பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள மடாலயங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ரகின் மாகாணத்தின் தலைநகர் சிட்வேவுக்கு அருகாமையில் உள்ள முகாம்களில் மட்டும் ஒருலட்சத்து 40 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ளஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியன்மாரில் உள்ள 14 மாகாணங்களில் ஒருமாகாணத்தைதவிர ஏனைய மாகாணங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, 5 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்ச் செய்கைகள் நீரில் முழ்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
https://youtu.be/a3rgtP6tTmA