நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நிகழ்த்தி அவர்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த 178 பேரை விடுவித்திருப்பதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர், “வடக்கு போர்னோ பகுதியில் நடந்த சண்டையில் பயங்கரவாதிகளின் பல முகாம்களை ராணுவம் அழித்துள்ளது.

அங்கு சிக்கியிருந்த 178 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் 101 பேர் குழந்தைகள். 67 பேர் பெண்கள்”என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் போகோ ஹராம் தீவிரவாதிகளிடமிருந்து நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் ராணுவத்தால் மீட்கப்பட்டாலும்,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபோக் நகரப் பள்ளியிலிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 200 மாணவிகளில் எவரும் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply